முதல்வர் மு.க. ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாளுக்கு உடல்நலம் பாதிப்பு.. சென்னை அப்பலோவில் அனுமதி
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் தாயாரும் தயாளு அம்மாள் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயாரும் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மனைவியுமான தயாளு அம்மாள் (92) வயோதிகம், உடல் நலக் குறைவு போன்ற காரணத்தால் சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் தயாளு அம்மாளுக்கு நேற்று இரவு வீட்டில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து அவரைக் குடும்பத்தினர் உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தாயாரின் உடல்நிலைக் குறித்து கேள்விபட்டதும் மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைைந்தார். அதேபோல், திமுக மூத்த தலைவர்களான துரைமுருகன், ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு சென்றபர். தயாளு அம்மாளின் உடல் நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அனைத்துக் கட்சிக் கூட்டம்... பாஜக ஏன் வரணும்.? விரிவாக விளக்கிய கனிமொழி.!
இதையும் படிங்க: திமுகவுக்கு ஓகே சொன்ன விஜய்...எதுக்காக தெரியுமா?