×
 

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது; தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்! 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யபடுவதோடு, கோடிகணக்கான தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அவ்வாறு செலுத்த இயலாத மீனவர்கள் சிறையிலேயே நெடுங்காலத்திற்கு அடைக்கப்படுகின்றனர். 

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி  தமிழக மீனவர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. பிரதமர் மோடி இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளால் வைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இன்று காலை மீண்டும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: இலங்கை சிறையிலிருந்து விடுதலை..புத்தாண்டில் தமிழகம் திரும்பிய தமிழக மீனவர்கள் ..!

எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறி நாகையைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. காரைநகர் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 10 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இலங்கை கடற்படையால் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 
 

இதையும் படிங்க: இலங்கை சிறையிலிருந்து விடுதலை..புத்தாண்டில் தமிழகம் திரும்பிய தமிழக மீனவர்கள் ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share