×
 

அப்போ 10 கொலை.. இப்போ 8 கொலை.. கம்பேரிசன் இருக்கே தவிர கண்ட்ரோல் இல்லை.. ஸ்டாலினை வம்பிழுத்த தமிழிசை..!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பொறுத்த வரையில் கம்பேரிசன் இருக்கே தவிர கண்ட்ரோல் இல்லை என பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் நேற்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு விளக்கம் அளித்து பேசினார். கடந்த 12 ஆண்டுகளில் 2024ம் ஆண்டில் தான் மிக, மிகக் குறைவான எண்ணிக்கையில், அதாவது, 1,540 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன; இதுதான் உண்மை. இதை நடுநிலையாளர்களும், பொது மக்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

கோவை சம்பவத்தைப் பொறுத்தவரையில், முதற்கட்டமாக தற்கொலை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மதுரை சம்பவத்தைப் பொறுத்தவரையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவகங்கையில் நடைபெற்ற கொலை சம்பவம் குறித்து விசாரித்ததில், குடும்பத் தகராறு எனத் தெரிய வந்துள்ளது.

சில கொலைக் குற்றங்கள் நடைபெறும் காட்சிகள், சமூக ஊடகங்களில் வெளிவரும் போது அதிக எண்ணிக்கையில் குற்றங்கள் நடைபெறுவது போன்ற தவறான கருத்து திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "ஆடு நனைக்கிறது என்று ஓநாய் அழுததாம்".. "உங்கள் கரிசனம் எங்களுக்கு வேண்டாம்".. பொறிந்து தள்ளிய இபிஎஸ்..!

இந்நிலையில் இதற்கு பாஜ மூத்த தலைவரும் தெலுங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று பதிலளித்துள்ளார். அவர் பேசியதாவது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும் பதிலில் இருந்து நான் மாறுபடுகிறேன் ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீடியோ பதிவு செய்துவிட்டு அதன் பிறகு கொலை செய்யப்படுகிறார் என்றால் எவ்வளவு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது திடீரென நடந்த கொலை நடந்தால்  பரவாயில்லை திட்டமிட்டு கொலை நடைபெற்றிருக்கிறது இப்படி இருக்கும்பொழுது சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று எப்படி பேச முடியும் முதல்வர் அவர்கள் முதலில் சட்டத்தை ஒழுங்காக வழி நடத்துங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அதுபோன்று என்னுடைய படம் ஒன்று காண்பித்தார்கள் கழிவறையில் ஒட்டப்பட்டுள்ளது போன்று அரசு அலுவலகங்களில் முதலமைச்சரின் படம் மாட்டபட்டிருப்பது போன்று மதுபான கடைகளிலும் மாட்டப்படும் என தமிழக பாஜக தலைவர் அறிவித்தார் அதன்படி பெண் அமைப்பைச் சார்ந்தவர்கள் செய்கிறார்கள் கழிவறையில் படங்கள் மாட்டப்படுவதற்கு கவலைப்படவில்லை கழிவறைக்கு செல்வதால் யாரும் உடலும் கெட்டுப் போவதில்லை ஆனால் மது கடைகளுக்கு சென்றால் உடல் கெட்டுப் போகும் முதலில் அந்த புத்தி அவர்களுக்கு இருக்கட்டும்.

 

நீங்களும் உங்களுடைய எதிர்ப்பை தெரிவியுங்கள் இதற்காக அவர்களை கைது செய்வது சரியில்லை போராட்டங்கள் என்பது பல வழிகளில் நடைபெறும் ஸ்டாலின் அண்ணன் போராட்டம் நடத்தாமல் இருந்தாரா எப்படி எல்லாம் போராட்டம் நடத்தினீர்கள் டாஸ்மார்க் முன்பு சென்று கருப்பு படி காண்பீர்கள் போராடுங்கள் அதில் ஒரு நாகரீகம் இருக்கட்டும் என்று தான் கூறுகிறோம்..

சட்டம் ஒழுங்கை பொறுத்த வரையில் கம்பேரிசன் இருக்கே தவிர கண்ட்ரோல் இல்லை 
எதற்கெடுத்தாலும் போன ஆட்சியில் இல்லையா இந்த ஆட்சியில் இல்லையா என்ற கேள்வி தான் அனைவரும் பேசுகிறார்கள் உங்கள் ஆட்சி நன்றாக இருக்கும் என்று தான் மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். அப்போது பத்து கொலை  நடந்தது இப்பொழுது எட்டு கொலை தான் நடந்திருக்கிறது என்றால் என்ன பதில் கொலை நடக்கக் கூடாது என்பதுதான் அனைவரும் விரும்புவது என தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குடிநீரை கோட்டை விட்டார், குடிகாரர் ஆக்கிவிட்டார்..! அதிரடியை ஆரம்பித்தார் அண்ணாமலை.. பாஜக நாளை கருப்புகொடி போராட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share