×
 

வீட்டு கிச்சனுக்கு வரும் கேஸ்.. பைப் மூலம் வழங்கும் தமிழ்நாடு அரசு.. வெளியானது அதிரடி அறிவிப்பு..!

வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

சுற்று சூழலை பாதுகாக்கவும் இயற்கை எரிவாவு பயன்பாட்டை அதிகரிக்கவும் குழாய் மூலமாக வீடுகளுக்கு இயற்கை எறிவாய்வு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களல் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, சென்னை, திருவள்ளூர், நாகை மாவட்டத்தில முதற்கட்டமாக இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் நீலாங்கரை, திருவான்மியூர், அடையாறு, சேப்பாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய இடங்களில் குழாய் அமைக்கும் பணிக்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி கொடுத்திருக்கிறது. மொத்தமாக 466 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய்கள் அமைக்கப்படும். 

இதையும் படிங்க: இது மோடி சர்க்கார்! பதில் சொல்லியே ஆகணும் Mr. ராகுல்…. டெல்லி அமைச்சரின் வைரல் வீடியோ...

இதில் 360 கிலோமீட்டர் வந்து கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணைய பகுதியில் வருவதால் அதற்கான அனுமதியை தான் தமிழ்நாடு கடலோர மண்டலம் ஒழுங்குமுறை ஆணையம் அதற்கான அனுமதி கொடுத்திருக்கிறது. இதற்காக 48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இந்த பணிகள் என்பது விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது. அந்த வகையில பார்க்கும்போது சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் வீடுகளுக்கு இந்த குழாய் மூலமாக எரிவாயு வழங்கும் திட்டம் விரைவில் செயல் வடிவம் பெறுவதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளது. 

இதையும் படிங்க: சீட் வேணும் என்றால் விஜய் கட்சிக்கு செல்லுங்கள்... நானே சேர்த்து விடுகிறேன் - சீமானின் பரபரப்பு ஆடியோ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share