×
 

அறநிலையத்துறை இணை ஆணையர்கள் இடமாற்றம்.. தமிழ்நாடு அரசு நடவடிக்கை..!

இந்து சமய அறநிலையத்துறையில், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் கோவில் இணை ஆணையர்கள் உட்பட, ஐந்து பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்னோர் உள்ளக்கிடக்கையின் மரபுவழி தொடர்புகளாகவும், வரலாற்றுப் பெட்டகங்களாகவும் நிலைபெற்றுள்ள திருக்கோயில்கள் மற்றும் அதன் பண்பாட்டு அசைவுகளைக் காக்கும் பொருட்டு திருக்கோயில் நிர்வாக ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முயற்சியாக இந்து சமய அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது.

இந்து சமய திருக்கோயிலின் நிர்வாகத்தை முறையாகப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், மேற்பார்வையிடவும் 1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் கீழ் இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையராக இந்திய ஆட்சி பணி அலுவலர் ஒருவர் ஆணையராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். 

இதையும் படிங்க: காலை உணவு திட்டத்தால் குழந்தைகளின் கற்றல் திறன் மேம்படுகிறது.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

துறையின் பொது நிர்வாகம் மற்றும் அனைத்து செயல்பாடுகளுக்கு தலைமைப் பொறுப்பில் ஆணையர் உள்ளார்.ஆணையர், அலுவலர்கள், சார்நிலை அலுவலர்கள், செயல் அலுவலர்கள், அயல்பணி அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள், காவலர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளடங்கிய 2409 அங்கீகிரிக்கப்பட்ட பணியிடங்கள் உள்ளன. 

கூடுதல் ஆணையர் (பொது மற்றும் (விசாரணை திருப்பணி), இணை ஆணையர் (தலைமையிடம், சட்டச்சேர்மம், கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள்) என பல பிரிவுகளின் கீழ் பணியாற்றி வருகின்றனர். தற்போது சேகர் பாபு இருந்து வருகிறார். இத்துறைக்கு என ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. தமிழக அறநிலையத்துறையின் நிர்வாகத்தை மேற்கொள்ள தமிழ்நாட்டில் 11 மண்டல இணை ஆணையர்களும், 28 கோட்ட உதவி ஆணையாளர்களும் உள்ளனர்.

இந்த நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறையில், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் கோவில் இணை ஆணையர்கள் உட்பட, ஐந்து பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஜோதி கடலூருக்கும், கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மதுரைக்கும், மதுரை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லதுரை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஐ.பி.எஸ். அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்... தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share