×
 

கேள்வி குண்டுகளை வீசிய கவுன்சிலர்கள்.. அரங்கை விட்டு ஓட்டம் பிடித்த மேயர்..

தஞ்சை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தின் போது கவுன்சிலர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க திணறிய மேயர் அரங்கை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை..

தஞ்சாவூர் மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கில் இன்று (மார்ச் 28) நடைபெற்றது. மேயர் ராமநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, விசிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அப்போது இக்கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் சரவணன் திருவோடு ஏந்தி, ருத்ராட்ச மாலை அணிந்து சாமியார் தோற்றத்தில் கலந்துகொண்டார்.

அப்போது அவர், '' தஞ்சாவூர் மாநகராட்சியில் எந்த பணிகளுக்கும் நிதி இல்லை, அதைக் கேட்க நாதி இல்லை'' என அச்சிட்ட பதாகையை கழுத்தில் தொங்க விட்டு மேயரிடம் முறையிட்டார். அப்போது சரவணன், தனது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் கடந்த ஒரு மாதமாக சரிவர செய்யப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: திருச்சியில் இலவச நீர் மோர் பந்தல்.. திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்..

பின்னர் திமுக கவுன்சிலர்கள் நீலகண்டன், ஆனந்த் ஆகியோர், ''தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்ட மாநாடு அரங்கு திரையரங்கமாக மாற்றப்பட்டு தனியாருக்கு விட்டதில் ரூ.1 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளது என குற்றம் சாட்டி இதற்கு மேயரும், ஆணையரும் பதிலளிக்க வேண்டும்'' என கூறினர். அப்போது மேயர் ராமநாதன் அதற்கு முறையான பதில் அளிக்காமல் கூட்டத்தை பாதியிலேயே முடித்துவிட்டு கூட்ட அரங்கை விட்டு சென்று விட்டார். இதற்கு அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

இதையும் படிங்க: விடுதி உரிமையாளர் கொலை.. உடலை துண்டு துண்டாக்கி.. கேம்ப் பயரில் வைத்து எரித்த அவலம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share