×
 

இந்து - முஸ்லீம் சண்டை வராமல் இருக்க பள்ளியில் மத உணர்வை கற்றுக்கொடுங்கள்- அண்ணாமலை..!

12ம் வகுப்பிற்குள் அவர்களுக்கு என்ன மனதில் உருவாகிறதோ அதுதான் அவர்களுடைய வாழ்க்கை அதன் பிறகு அது உருவாகாது

''ஒரு மாணவன் பள்ளியை விட்டு வெளியே செல்லும் போது மற்ற மதங்கள் குறித்தும் அடிப்படை புரிதல் இருக்க வேண்டும்.. அதை பள்ளியில் சொல்லி கொடுக்க வேண்டும்'' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், ''இன்றைக்கு நமது பள்ளிக்கூடத்தில் தேவை எல்லா மதத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டிய கல்வி ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் கொஞ்சமாவது இருக்க வேண்டும். அரசு சொல்கிறதோ இல்லையோ.. பகவத் கீதையின் 18 பகுதிகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். எட்டாம் வகுப்பு ஆரம்பித்து 12 ஆம் வகுப்பு முடியும் போது அந்த குழந்தைக்கு ஸ்லோகம் தெரிந்திருக்க வேண்டும்.

 பகவத் கீதையின் கருத்து, பொருள் தெரிந்து இருக்க வேண்டும். மகாபாரதத்தை ஒரு குழந்தைக்கு பாடமாக சொல்லிக் கொடுக்க வேண்டும். அந்த குழந்தை மேடையின் மீது நாடகம் போடும்போது ஒரு மகாபாரதத்தில் ஒரு பகுதியை எடுத்துரைக்க வேண்டும். 

இதையும் படிங்க: அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்தால் தலைவர் பதவி ராஜினாமா.? ஒரு முடிவில் இருக்கும் அண்ணாமலை.!!

அதே குழந்தைக்கு ஒரு அடிப்படை குர்ஆன் என்ன சொல்கிறது? என்கிற புரிதலையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.  ஒரு புரிதல் அது. இந்து மதத்தை பின்பற்றக்கூடிய குழந்தையாக இருந்தாலும், மற்ற மதத்தின் அடிப்படையை சொல்லிக் கொடுத்துதான் அந்த குழந்தையை பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே அனுப்ப வேண்டும். கிறிஸ்தவ மதத்தினுடைய அடிப்படையும் அந்த குழந்தைக்கு தெரிந்திருக்க வேண்டும்.

இதையெல்லாம் சொல்லிக் கொடுத்து அனுப்பினால்தான் இந்து -முஸ்லிம் சண்டை வராது. இல்லையென்றால் வந்து கொண்டே தான் இருக்கும். ஏனென்றால், அடிப்படை புரிதல் கிடையாது. ஒரு மதத்தை பற்றி நமக்கு தெரியாது. நம்முடைய மதத்தை உயர்ந்த மதமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். தவறில்லை. நமது மதத்தை உயர்ந்த மதமாக நினைக்கும் போது, இன்னொரு மதத்தை தாழ்வாக ஏன் சில பேர் நினைக்கிறார்கள் என்றால் அந்த மதத்தை பற்றி புரிதல் அவர்களுக்கு இல்லை.

என்னுடைய அன்பான வேண்டுகோள்... ஒரு பள்ளிக்கூடத்திலும்  அடிப்படை புரிதல் தர்மா, தத்துவம், மதத்தினுடைய அடிப்படை புரிதல் ஒரு குழந்தைக்கு தெரிந்தால் மட்டுமே அந்த குழந்தை ஒரு மனிதனை, சகோதரனாக, சகோதரியாக எல்லா மனிதனையும் சமமாக இன்னொரு மதமாக இருந்தாலும் அந்த மதத்தில் இருக்கக்கூடிய நல்ல விஷயங்களை அந்த குழந்தை கற்றுக் கற்றுக் கொள்ளும். நான் எல்லா பள்ளிக்கூடத்திலும் என்னுடைய பேச்சில் இந்த கருத்தை நான் சொல்லி வருகிறேன்.

குழந்தைக்கு ஆன்மீகத்தை, தர்மத்தை மாற்று மதமாக இருந்தாலும் எடுத்து சொல்லிக் கொடுங்கள். 12ம் வகுப்பிற்குள் அவர்களுக்கு என்ன மனதில் உருவாகிறதோ அதுதான் அவர்களுடைய வாழ்க்கை அதன் பிறகு அது உருவாகாது'' எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: அமித் ஷாவிடம் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை… அதிமுக- பாஜக கூட்டணியில் ட்விஸ்ட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share