×
 

மாரியம்மன் கோயிலில் களைகட்டிய குடமுழக்கு விழா.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் 

திருச்சி அருகே மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மேல்பத்து ஊராட்சியில் உள்ள பாண்டியபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோவில் மற்றும் வேம்படி  கருப்பு சாமிகளுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த 7ம் தேதி அன்று கொள்ளிடம்  ஆற்றில் புனித நீராடி, எடுத்துவரப்பட்டு மகா மாரியம்மன் ஆலயம் அருகே யாகசாலை அமைக்கப்பட்டு மங்கள இசையுடன் விநாயகர் வழிபாடு, நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. 

மதியம் சூரிய ஒளியிலிருந்து நேரடியாக அக்னி எடுத்தல் நிகழ்ச்சியும், மாலை விநாயகர் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு முதல் கால யாக பூஜையும், இரவு 8 மணிக்கு மேல் பட்டு வஸ்தர சமர்ப்பணமும் நடைபெற்றது.

இதையும் படிங்க: சரமாரி கேள்வி எழுப்பிய விவசாயிகள்.. ஓட்டம் பிடித்த பருத்தி வியாபாரி..!

அதனை தொடர்ந்து மகா மாரியம்மன் சிலை பீடத்தில் நிலை நிறுத்தல், எந்திர ஸ்தாபனம் அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து இன்று 09ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 4-ம் காலை யாக பூஜையும், தொடர்ந்து யாத்ரா தானம் நடைபெற்றது.

இதையடுத்து புனித தீர்த்த  கலசங்கள் யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு கண்டு மகா மாரியம்மன், வேம்படி கருப்பு சாமி ஆகிய தெய்வங்களின் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரி யார்கள் வேத மந்திரங்கள் ஓதி புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாண்டியபுரம், மற்றும் இன்றி சுற்றியுள்ள ஈச்சம்பட்டி, மேல்பத்து, துடையூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: திராவிடத்தின் பொய் பித்தலாட்டத்தைதான் அரசுப் பள்ளி மாணவர்கள் படிக்கணுமா.? சசிகாந்தை போட்டு பொளந்த அண்ணாமலை.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share