தமிழகத்தையே உலுக்கிய மூவர் கொலை வழக்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!
பட்டியலினத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.
பட்டியலினத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.
சங்கரன் கோவில் அருகே உள்ள உடப்பன்குளம் கிராமத்தில் 2014 ஆம் ஆண்டில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஜாதி கொடிக்கம்பம் அருகே பட்டாசு வெடித்தது மற்றும் இறந்தவரின் உடலை குறிப்பிட்ட தெருவழியாக எடுத்துச் செல்வது தொடர்பாக இரு ஜாதியினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி இரவில் உடப்பன்குளம் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த காளிராஜ், முருகன் வேணுகோபால் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக திருவேங்கடம் போலீசார் விசாரணை நடத்தி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, உடம்பன் குளத்தைச் சேர்ந்த பொன்னுமணி, குட்டிராஜ் என்ற பரமசிவன், குருசாமி, கண்ணன், முத்துச்சாமி, காளிராஜ் என்ற தங்கராஜ் உட்பட 25 பேரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திடீர் திருப்பம்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!
இந்த வழக்கில் சென்னையில் உள்ள இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் மற்றும் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு முடிந்த நிலையில், குற்றம் சாட்ட பட்டவர்களில் பொன்னுமணி, குருசாமி, காளிராஜ் என்ற தங்கராஜ், முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை மற்றும் தலா 90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
அதேபோல குட்டிராஜ் என்ற பரமசிவன், கண்ணன் உலக்கன் என்ற முத்துச்சாமி கண்ணன் முருகன் என்ற பாலமுருகன் ஆகியோருக்கு தலா ஐந்து ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டது. வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொரு கண்ணன், சுரேஷ் ஆகியோருக்கு தலா இரண்டு ஆயுள் தண்டனை மற்றும் எட்டு லட்சம் அபராதம் விதித்தும், 11 பேரை விடுதலை செய்தும் 2014 செப்டம்பர் 24 நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்ய போலீசார் தரப்பில் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனை பெற்றவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்ய கூறியும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மணுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் ஆர் பூர்ணிமா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா வாதிட்டார். இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் நிகழ்ந்துள்ள குற்றத்தின் தன்மை தூக்கு தண்டனை விதிப்பதற்கு போதுமானதாக இல்லை. குற்ற வழக்குகளில் தூக்குத்தண்டை விதிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எந்த அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ள அளவுகோல் இந்த வழக்கில் தூக்குத்தண்டை விதிக்க போதுமானதாக இல்லை எனவும், இதனால் நான்கு பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றி அமைக்கப்படுகிறது என்றும் அறிவித்தனர்.
ஆயுள் தண்டனை பெற்ற ஏழு பேரில் குட்டிராஜ் என்ற பரமசிவன், உலக்கன் என்ற முத்துச்சாமி, முருகன் என்ற பாலமுருகன் ஆகியோருக்கு அந்த ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற நான்கு பேரின் ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது எனவும் அவர்கள் மீது வேறு வழக்குகள் இல்லாத நிலையில் விடுதலை செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்.. மடக்கி பிடித்த போலீஸ்..!