×
 

கோடீஸ்வர சாமியை பார்க்க.. 5 கிலோ நகை அணிந்து வந்த நபர் .. வியந்து பார்த்த பக்தர்கள் ..!

திருப்பதி பெருமாளே வியக்கும் அளவிற்கு உடல் முழுவதும் தங்க நகை அணிந்து வந்து பிரமிக்க வைத்திருக்கிறார் பக்தர் ஒருவர்!

கோவில் என்றால் அது திருப்பதி பெருமாள் கோவில் தான்.  தினம்தோறும் பக்தர்கள் காணிக்கையாக பல கோடி ரூபாய் உண்டியலில் விழுகிறது. பல ஊர்களின் நிலங்கள் தானமாக கோவிலுக்கு எழுதி வைக்கப்படுகிறது தங்கம் வெள்ளி வைரம் என பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர் .

உலகில் உள்ள பணக்கார கோவில்களில் முக்கிய இடம் பிடித்திருக்கும் .பொதுவாகவே கூட்டம் அலைமோதும் திருமலையில் விசேஷ நாட்களில்  கூட்டம் அதிகரித்துக்காணப்படும் அந்த வகையில் புத்தாண்டை ஒட்டி திருப்பதி பெருமாள் கோவிலுக்கு கழுத்தில் 5 கிலோ நகை போட்டு வந்த பக்தர் சாமி தரிசனம் செய்தார் பெருமாளை பார்க்க வந்த அனைவரும் நகை போட்டு வந்த நபரை பார்த்து வியந்து போனார்கள்

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் கொண்டா விஜயகுமார். இவர் தெலுங்கானா ஒலிம்பிக் சங்க இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் தனது கழுத்து மற்றும் கைகளில் அதிக பருமன் மற்றும் எடை கொண்ட தங்க ஆபரணங்களை அணிந்து திருப்பதிக்கு வந்தார்.நான் அடிக்கடி திருமலை திருப்பதியை வணங்க வருவது வழக்கம், புத்தாண்டில் தரிசிக்க வந்தேன். அதிக நகைகள் அணிவது எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆகையால் இவ்வாறு அணிந்து வந்தேன்' என்றார்.

தங்க ஆபரணங்களை அணிந்து கோவிலுக்கு வந்திருந்த விஜயகுமாரை சக பக்தர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்

இதையும் படிங்க: திருமணம் முடிந்த கையோடு.. திருப்பதி கணவருடன் சாமி தரிசனம் செய்த பி.வி.சிந்து

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share