#BREAKING அதிகாலையில் துப்பாக்கிச்சூடு... 27 வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையனை சுட்டிப்பிடித்த போலீஸ்...!
27 கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையனை சிதம்பரம் போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர்.
சிதம்பரம் அருகே சித்திரப்பாடியில் தப்பியோட முயன்ற கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படிகை கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடு ஒன்றில் நகை உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு குற்றவழக்கு தொடர்புடைய ஸ்டீபன் என்பது தெரிய வந்தது .
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபுர பகுதியைச் சேர்ந்த ஸ்டீபனை இன்று காலை சுமார் 5:30 மணி அளவில் அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார், திருட பயன்படுத்திய பொருளை கைப்பற்றுவதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். சித்தலாப்பாடி அந்த இடத்தின் அருகே சென்றபோது ஒரு காவலரை ஸ்டீபன் தான் மறைந்து வைத்திருந்த கத்தியால் கிழித்திவிட்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார்.
அப்போது பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தற்காப்புக்காக குற்றவாளி ஸ்டீவனை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதை அடுத்து ஸ்டீபன் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஸ்டீபன் தாக்கியதில் காயமடைந்த காவலரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது பிடிபட்டுள்ள இந்த ஸ்டீபன் மீது தமிழகம் முழுவதும் சுமார் 27க்கும் மேற்பட்ட திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.