×
 

சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ்... இந்தாண்டு சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது - குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் உறுதி!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தற்போது தேவையான அளவு நீர் இருப்பதால் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

சென்னை நகர மக்களின் ஏரியில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. அப்படி குடிநீர் தேவையை நிறைவேற்றும் அதற்கு முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை மற்றும் வீராணம் ஏரிகள் உள்ளன. கடந்தாண்டு அவ்வப்போது மிதமானது முதல் பழத்த மழை செய்திருந்தாலும், தற்போதைய சூழலில் வெயில் அதிகரித்துள்ள நிலையில் தண்ணீர் தேவை நாளுக்கு நாள் சென்னையில் அதிகரித்து வருவதால் ஏரிகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

என்ன நிலையில் தான் எதிர்காலத் தேவைக்கு ஏற்ற வகையில் நீர் மேலாண்மையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பான மண்டல அளவிலான நீர் மேலாண்மை கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குனர் டி.ஜி.வினய் பங்கேற்றார். அப்போது கருத்தரங்கில் பேசிய அவர், சென்னையில் நாளொன்றுக்கு 1100 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதில் 350 மில்லியன் லிட்டர் நீர் கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக கிடைக்கப்பெறுகிறது. மீதமுள்ள 750 மில்லியன் லிட்டர் நீர் ஏரிகளில் இருந்து எடுக்கப்படுகிறது.

இதையும் படிங்க: தனியார் கெமிக்கல் குடோனில் பயங்கர தீ விபத்து... பள்ளிக்கும் பரவியதால் பெரும் பதற்றம்..!

தொடர்ந்து 2027-ல் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மூலமே நாளொன்றுக்கு 760 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும். சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை  இயல்பை ஒட்டி பெய்துள்ளது. அதனால் தற்போது அனைத்து ஏரிகளிலும் தேவையான அளவு நீர் இருப்பு உள்ளது எனவே இந்த ஆண்டு சென்னை மாநகருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது, இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசியவர் சென்னை மாநகரில் வெளியேறும் கழிவு நீரில் 14% சுத்திகரிக்கப்பட்டு குடிநீருக்கு உகந்த நீராக மாற்றப்படுகிறது.

நிலத்தடி நீர் மற்றும் ஏரி நீரை பாதுகாக்கும் விதமாக சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் மணலி ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் ஆகிய தொழிற்பேட்டைகளில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்த சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை கட்டுமானத்துக்கு பயன்படுத்த கிரடாய் மூலமாக கட்டுமான நிறுவனங்களுடன் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். இதன் மூலம் வெளி மாவட்டங்களுக்கு சென்று நிலத்தடி நீரை உறிஞ்சுவது தடுக்கப்படும். மேலும் சம தளபதி சென்னை மாநகரம் அமைந்திருப்பதால் நீரையோ கழிவுநிறையோ புவியீர்ப்பு விசையின்படி அனுப்ப முடிவதில்லை மோட்டார்கள் மூலமாக தான் உந்தப்படுகிறது. இதற்காக சென்னை குடிநீர் வாரியம் மாதம் ரூபாய் 250  கோடி மின் கட்டணம் செலுத்துவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரூ.1,100 கோடி வரி செலுத்த மின்சார வாரியத்திற்கு நோட்டீஸ்.. ஜிஎஸ்டி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நிறுத்தம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share