×
 

நீதிபதி சந்துரு அறிக்கையே தீர்வு.. ரூட் காட்டிய திருமா...!

பள்ளிப் பிள்ளைகளிடையே பரவும் வன்முறை கலாச்சாரத்தை தடுக்க நீதிபதி சந்துரு அறிக்கையை நடைமுறைப்படுத்துவதே தீர்வுக்கு வழிவகுக்கும் என திருமாவளவன் தெரிவித்தார்.

நெல்லையில் சக மாணவனை கத்தியால். குத்திய சம்பவம் தொடர்பாக பேசிய திருமாவளவன் மிகுந்த கவலை அளிப்பதாக கூறினார். இது குறித்து வர் விடுத்த அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியொன்றில் எட்டாம் வகுப்பு பயிலும் ரஹமத்துல்லா என்கிற மாணவனை அதே பள்ளியில் பயிலும் சக மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளான். தடுக்கப் பாய்ந்த ஆசிரியரையும் வெட்டியுள்ளான். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என கூறினார்.

பள்ளிச் சிறுவன் மீது இன்னொரு சிறுவன் நடத்தியுள்ள இந்தக் கொலைவெறித் தாக்குதல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்றும் பள்ளிச் சிறுவர்களிடையே இதுபோன்ற வன்முறைக் கலாச்சாரம் பெருகிவருவது மிகுந்த கவலையளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நான் அதிமுகவில் இருந்து விலகுகிறேனா..? திருமாவுக்கு சாட்டையடி கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

ஏற்கனவே நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சார்ந்த பள்ளி மாணவர்கள் நாங்குநேரி சின்னத்துரை, தேவேந்திர ராஜா ஆகியோர் மீது இது போன்ற கொலைவெறித் தாக்குதல்கள் நடந்துள்ன. தற்போது பாளையங்கோட்டையிலும் அதேபோன்ற வன்முறை நடந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என திருமாவளவன் கூறினார்.

சாதியவாத, மதவாத அமைப்புகளும் அதே கருத்தியலைப் பரப்பும் ஒருசில அரசியில் கட்சிகளும் வெளிப்படையாகவே இளம்தலைமுறையினரிடையே "ஆண்ட பரம்பரை, வீரப்பரம்பரை" என்றெல்லாம் திட்டமிட்டே பரப்புரைகளைச் செய்துவருவதும், அத்தகைய குற்றங்களை ஊக்கப்படுத்துவதும் தாம் பள்ளிச் சிறுவர்களிடையேயும் இதுபோன்ற வன்முறை ஈர்ப்பு உருவாகிறது என கூறிய அவர், மதவெறி- சாதிவெறித் தாக்குதல்களை நடத்தும் வகையிலானத் துணிவையும் தருவதாக தெரிவித்தார்.

இதனை "நீதிபதி சந்துரு ஆணையம்" சுட்டிக் காட்டியுள்ளது. எனவே, இச்சூழலில் அந்த விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் பள்ளி மாணவர்களிடையே சகோதரத்துவம் தழைப்பதற்கேற்ற விழிப்புணர்வை உருவாக்கிட அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: கூடுதல் தொகுதி, ஆட்சியில் பங்கு.. திமுக கூட்டணியை உடைக்க ஆசைவார்த்தை.. திருமா கொடுத்த ஷாக்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share