×
 

இந்து அமைப்பினரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கும் காவல்துறை...! விடுதி, ரயில் நிலையங்களில் தீவிர சோதனை...!

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் ஆர்ப்பாட்டம் நடத்தோவதாக இந்து முன்னனி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் ஆர்ப்பாட்டம் நடத்தோவதாக இந்து முன்னனி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

இந்து அமைப்பினர் போராட்டம் அறிவித்ததையடுத்து திருப்பரங்குன்றத்திற்குள் நுழைவதற்கான 16 வழிகளையும் அடைத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் நுழையும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. 

இதையும் படிங்க: இந்து அமைப்பினர் விரட்டி, விரட்டி கைது... வீடு, வீடாக புகுந்து அலோக்காக தூக்கும் காவல்துறை! 

இந்து அமைப்பினர் போராட்டம்: 

திருப்பரங்குன்றம் மலையை மீட்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து முன்னனி ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்து முன்னனியின் இந்த அறிவிப்பால் இருதரப்புக்கு இடையே பிரச்சனை ஏற்பட வாய்புள்ளதாக கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  இந்து முன்னனி,சிவசேனா,பாஜக உள்ள சனாதன சக்திகளை கொண்ட கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இந்து முன்னனி உள்ளிட்ட அமைப்பினர் போராட்ட அறிவிப்பினால் புதுக்கோட்டை மாவட்டம், எல்லை பகுதியான விராலிமலை அடுத்துள்ள லஞ்சமேடு எனும் இடத்தில் போலீஸார் செக்போஸ்ட் அமைத்து மத்திய மண்டலத்தில் இருந்து மதுரை செல்லும் வாகனங்களை சோதனைக்கு பிறகு அனுமதிகின்றனர். மதுரை முழுவதும் உள்ள விடுதிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் போலீசார், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாராவது தங்கி இருந்தால் அவர்களை கைது செய்து வருகின்றனர். 

2000 போலீசார் குவிப்பு:

.திருப்பரங்குன்றம் பகுதிக்கு கார் வாகனங்களை தவிர்த்து ரயில் மூலமாக இந்து முன்னணியினர் வரலாம் என கருதி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மற்றும் துணை ஆணையர்கள் 3 பேர் உள்ளிட்ட 2000 க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 மதுரை மாவட்டம் முழுவதும் 3500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கபட்டுள்ளனர்.  திருப்பரங்குன்றத்தைச் சுற்றிலும் உள்ள புறநகர் பகுதிகளான ஹார்விபட்டி, நிலையூர் அவனியபுரம், முத்துப்பட்டி, பசுமலை தோப்பூர்,தனக்கன்குளம், வேடர் புளியங்குளம் விலக்கு,நாகமலை புதுக்கோட்டை மேலக்கால் விலக்கு,மதுரை -அருப்புக்கோட்டை சாலை, ராமநாதபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வரக்கூடிய வாகனங்கள் பலத்த சோதனைக்கு பின்னரே மதுரைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடைகள் அடைப்பு: 

 அதேபோல், திருப்பரங்குன்றம் கோயிலை நோக்கி வரும் அனைத்து பாதைகளிலும் காவல்துறையினர் பேரிகார்டுகள் அமைத்து தீவிர சோதனைக்கு பிறகு பக்தர்களை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனர்.  144 தடை உத்தரவு மற்றும் இந்து முன்னணி அறப் போராட்டம் அறிவிப்பு காரணமாக திருப்பரங்குன்றம் பிரதான கோபுரம் முன்பாக உள்ள கடைகள் அடைக்கப்பட்டு,  பூஜை பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடை மட்டுமே திறக்கப்பட்டு உள்ளன.

இதையும் படிங்க: தேர்தல் ஆணையர் நியமிப்பதில் மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரம்.. பிப்.12ம் தேதி விசாரணை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share