×
 

நெல்லையப்பர் திருக்கோயிலில் திருவாதிரை திருவிழா ..மெய்சிலிர்க்க வைத்த கொடியேற்றம் ..!

நெல்லை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது.

சிவபெருமான் திரு நடனம் ஆடிய பஞ்சசபைகளில் ஒன்றான தாமிரசபை  அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற  ஸ்தலமாகிய இத் திருக்கோயிலில் இந்த ஆண்டுக்கான மார்கழி திருவாதிரை திருவிழா  அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது . கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை சுவாமி நெல்லையப்பர் கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை. கோ பூஜை. கஜ பூஜை ஆகியவை நடைபெற்றது.

தொடா்ந்து  கொடிப்பட்டம் வீதிஉலா வந்ததும் கொடிக்கு பூஜைகள் நடைபெற்று சுவாமி சன்னதி முன்புள்ள தங்க கொடிமரத்தின்முன் வேத மந்திரங்கள் கூற ஓதுவாமூர்த்திகள் திருமுறை பாட நாதஸ்வர இன்னிசையுடன் கொடியேற்றம் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு பால் மஞ்சள்  உள்ளிட்ட 11 வகை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின்னர் மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. 10 தினங்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் அதிகாலையில்  பெரிய சபாபதி சன்னதி முன் மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து  திருவெம்பாவை பாடல்கள் பாடப்பெற்று  நடன தீபாராதனை நடைபெறும்.

 திருவிழாவில் நான்காம் திருநாள் அன்று மாலை வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதி புறப்பாடும் அதனைத் தொடர்ந்து கார்த்திகை திருவனந்தல் பூஜை நிறைவாக இரவு பூம்பல்லக்கு புறப்பாடும் நடைபெறும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான பத்தாம் திருநாள் வருகின்ற 13 ம் தேதி  அன்று அதிகாலை  பஞ்சசபையில் ஒன்றான தாமிரசபையில் வைத்து  பசு தீபாராதனையும், அதைத் தொடர்ந்து  திருவெம்பாவை பாடல்கள் பாடப்பெற்று  நடன தீபாராதனையும்  தாமிரசபையில் நடராஜர் திருநடனமும் நடைபெறும். கொடியேற்றத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  விழா ஏற்பாடு திருக்கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

இதையும் படிங்க: அண்ணா பெல்ட்டால் அடிக்காதீங்க அண்ணா.. திமுகவினர் ஒட்டிய போஸ்டர்.. பரபரக்கும் நெல்லை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share