×
 

விளையாட்டு.. விபரீதம்..! பட்டாசு வெடித்த மாணவனின் நடுவிரல் துண்டான சோகம்..!

திருவள்ளூர் மாவட்டம் நெடியம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பட்டாசு வெடித்த போது மாணவனின் நடுவிரல் குண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பில் பங்கேற்ற மாணவர் வெடி வெடித்த போது விரல்கள் துண்டாகிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே நெடியம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 25-க்கும் மேற்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்கள் படித்து வருகின்றனர். நாளை நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு கடைசி தேர்வுக்காக சிறப்பு வகுப்பு நடத்தப்பட்ட நிலையில் மாணவர்களை ஆசிரியர் படிப்பதற்காக அழைத்துள்ளார்.

பள்ளி வளாகத்தில் ஆசிரியை சிறப்பு வகுப்பு நடத்தி கொண்டிருந்தபோது, அபினேஷ் என்ற மாணவன் பையில் மறைத்து வைத்திருந்த பட்டாசை கையில் பிடித்து வெடித்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்த நிலையில் மாணவனின் நடுவிரல் துண்டானது. மற்ற நான்கு விரல்களிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவனை படிப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டவுடன் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எதிர்பாராத விதமாக கையில் பட்டாசு வெடித்த போது பத்தாம் வகுப்பு மாணவர்களின் நடுவிரல் தொண்டான சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: அடேங்கப்பா! 6 கோடி மதிப்பிலான கோகைன் பறிமுதல்...செயின் லிங்க்கை அலேக்காக தூக்கிய போலீஸ்

இதையும் படிங்க: மது, மாமிசத்திற்கு அடிமையானவர்… இஸ்லாமிய தலைவரை இழிவுபடுத்திய துரைமுருகன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share