மத்திய தொழில் பாதுகாப்பு படை தினம்.. 6559 கி.மீ விழிப்புணர்வு சைக்கிள் பயணம்!
தூத்துக்குடி மத்திய தொழில் பாதுகாப்பு படை தினத்தை முன்னிட்டு சுமார் 6559 கிலோமீட்டர் தூர சைக்கிள் பயணம் வந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியாவின் மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படை தினமான மார்ச் 10ம் தேதியை முன்னிட்டும் வளமான இந்தியா பாதுகாப்பான இந்தியா என்ற நோக்கத்தை வலியுறுத்தியும் இந்தியாவில் கடலோர பாதுகாப்பு கடல் பகுதி வழியாக போதைப்பொருள் கடத்தல் ஆள் கடத்தல் ஆயுத கடத்தல் மற்றும் பெண் கல்வி குறித்து கடலோர மீனவ மக்கள் மற்றும் பொதுமக்கள் மாணவ மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற சைக்கிள் விழிப்புணர்வு பயணம் கடந்த மார்ச் 7ஆம் தேதி மேற்குவங்க மாநிலம் பக்காளி கடல் பகுதியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைத்தார்.
கிழக்கு கடற்கரை மாநிலம் வழியாக துவங்கிய இந்த சைக்கிள் பயணம் மேற்கு வங்கம் ஒடிசா ஆந்திரா பாண்டிச்சேரி தமிழ்நாடு வழியாக ராமநாதபுரம் தூத்துக்குடி வழியாக மார்ச் 31ஆம் தேதி கன்னியாகுமரியில் முடிவடைகிறது 57 பேர் இந்த குழுவில் பங்கேற்றுள்ளனர் இதில் எட்டு பேர் பெண்கள்
இதையும் படிங்க: ரத்தத்தை தேடும் அட்டை… செங்கோட்டையனுக்கு திடீர் துதி... ஆர்.பி.உதயகுமாரின் அநியாய வேஷங்கள்..!
இதேபோன்று மேற்கு கடற்கரை மாநிலங்கள் வழியாக குஜராத்தில் இருந்து கடந்த மார்ச் ஏழாம் தேதி மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் துவங்கி மும்பை கர்நாடகா கேரளா வழியாக மார்ச் 31ஆம் தேதி கன்னியாகுமரியில் நிறைவடைகிறது இந்த குழுவில் 85 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பங்கேற்றுள்ளனர் மொத்தம் 6559 கிலோமீட்டர் தூரம் இந்த விழிப்புணர்வு சைக்கிள் பயணம் நடைபெற்றது.
இந்த சைக்கிள் பயணத்தில் பங்கேற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஒன்பது மாநிலங்களில் உள்ள கடலோர கிராமங்கள் மற்றும் பொதுமக்களிடம் வளமான இந்தியா பாதுகாப்பான இந்தியா ஆகியவற்றை வலியுறுத்தியும் கடலோர பாதுகாப்பு கடல் பகுதி வழியாக அந்நியர்கள் ஊடுருவுவது போதைப் பொருள் கடத்தல் ஆள் கடத்தல் ஆயுத கடத்தல் ஆகியவை குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மேலும் பெண் கல்வியின் அவசியத்தை குறித்தும் தங்கள் சைக்கிள் பயணத்தில் பல்வேறு கிராமங்களில் பொதுமக்களிடையே இவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
கிழக்கு கடற்கரை மாநிலங்கள் வழியாக சைக்கிள் பயணம் மேற்கொண்ட குழு இன்று மாலை தூத்துக்குடிக்கு வருகை தந்தது தூத்துக்குடிக்கு வருகை தந்த இந்த 57 பேர் கொண்ட குழுவினருக்கு தூத்துக்குடி மத்திய தொழிற் பாதுகாப்பு படை கமாண்டண்ட் வி பி சிங் தலைமையிலான மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சிறப்பான வரவேற்பு அளித்து அவர்களை பாராட்டினர்.
இதையும் படிங்க: பறிபோகிறதா அண்ணாமலையின் தலைவர் பதவி..? புதிய தலைவர் ரேசில் வானதி, தமிழிசை, நயினார்..!