வீரபாண்டி ஆறுமுகம் கொள்ளையடித்த ரூ80 லட்சம்... 28 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துக்கு வந்த சிக்கல்
கொள்ளையடித்த வீரபாண்டி ஆறுமுகம் இறந்துவிட்டாலும் அதை அனுபவிக்கும் அவருடைய குடும்பத்தினரும் அவரால் சேர்த்த சொத்துக்களை வைத்திருப்பவர்களும் குற்றவாளிகளே
கொள்ளையடித்த வீரபாண்டி ஆறுமுகம் இறந்துவிட்டாலும் அதை அனுபவிக்கும் அவருடைய குடும்பத்தினரும் அவரால் சேர்த்த சொத்துக்களை வைத்திருப்பவர்களும் குற்றவாளிகளே என உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி… HC-யிலும் உள்குத்து… வெடிக்கும் சமூக ஆர்வலர்..!
மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, விசாரணை நடத்த சேலம் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 1996 ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்தவர் வீரபாண்டி ஆறுமுகம். இவர் தன்னுடைய பதவி காலத்தில் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
அதனடிப்படையில் வீரபாண்டி ஆறுமுகம், அவருடைய மனைவிகள் லீலா, ரங்கநாயகி, மகன்கள் நெடுஞ்செழியன், ராஜேந்திரன், மகள் நிர்மலா, மருமகள் பிருந்தா உள்ளிட்டவர்களுக்கு எதிராக 2004 ஆம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தங்களுடைய குடும்பத்தினரை விடுவிக்கக்கோரி வீரபாண்டி ஆறுமுகம் தரப்பில் சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி சொத்து குவிப்பு வழக்கில் இருந்து வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரையும் விடுதலை செய்து சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு நீதிபதி வேல்முருகன் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், 'சேலம் நீதிமன்றம் வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. உரிய சாட்சி விசாரணைக்கு பிறகு அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார்களா? இல்லையா? என்பது இறுதி விசாரணையில் தெரிய வரும்.
ஆரம்பக் கட்டத்திலேயே அவர்ளை வழக்கிலிருந்து விடுவித்த சேலம் நீதிமன்றத்தின் உத்தரவு தவறு. மீண்டும் சம்பந்தப்பட்டவர்கள் மீது சேலம் நீதிமன்றம் குற்றச்சாட்டுப் பதிவுகளை மேற்கொண்டு முறைப்படி விசாரணை மேற்கொள்ள வேண்டும் மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினரை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்தது தவறு. கொள்ளையடித்த வீரபாண்டி ஆறுமுகம் இறந்துவிட்டாலும் அதை அனுபவிக்கும் அவருடைய குடும்பத்தினரும் அவரால் சேர்த்த சொத்துக்களை வைத்திருப்பவர்களும் குற்றவாளிகளே ' என உத்தரவிட்டுள்ளார்.