திருச்செங்கோட்டில் வெடித்த மர்ம பொருள்.. தூக்கி வீசப்பட்ட கடை ஷட்டர்.! குழம்பி நிற்கும் போலீசார்..!
திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் உள்ள டீக்கடையில் மர்ம வெடி பொருள் வெடித்து விபத்து
திருச்செங்கோடு புது பஸ் ஸ்டாண்ட் கட்டடத்தில் நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை சேர்ந்த கவின்குமார் என்பவர் டீ கடை வைத்து நடத்தி வருகிறார்.
அவரது கடையில் இருந்து இன்று அதிகாலை 3.40க்கு திடீரென வெடி சத்தம் கேட்டுள்ளது. உள்ளே இருந்த மொத்த பொருட்களும் ரோட்டில் சிதறி விழுந்துள்ளது.
கடைக்குள் இருந்த பேன், சிசிடிவி கேமராக்கள் என எதுவும் மிஞ்சவில்லை.
வெடி சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்குவந்த போலீசார் சிதறி கிடந்த பாகங்களை சேகரித்து சோதனையில் ஈடுபட்டனர். மின் கசிவோ, சிலிண்டர் எரிவாயு கசிவோ இல்லை என்பது தெரிந்தது.
இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸின் அடுத்த திட்டம் என்ன..? உடைத்துச் சொன்ன மோகன் பகவத்..!
மர்மமான பொருள் ஏதேனும் டீ கடைக்குள் இருந்ததா என விசாரணையை தீவிரப்படுத்தினர்.
கடையின் ஷட்டர் சுமார் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டு எதிரே உள்ள பள்ளி ஒன்றின் காம்பவுண்ட் சுவர் அருகே கிடந்தது.
இரும்பு சட்டர் வெடித்து சிதறும் அளவிற்கு என்ன வெடித்தது என போலீசார் குழம்பி போயினர்.
சிசிடிவி காட்சிகளில் தீப்பொறி ஆரம்பமாகி வெடிப்பது தெரிகிறது.
இது குறித்து தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து கூறினால் தான் முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தலைவிரித்தாடும் ராகிங் கொடுமை! பிறப்புறுப்பில் காம்பஸால் குத்தி.. கொடூரமாக சித்ரவதை செய்த சீனியர்கள்.!