×
 

தமிழகத்தில் மூன்று மொழிகள் படிக்கக் கூடாது.. மூன்று வேளையும் சாராயம் குடிக்கலாம்.. திமுக அரசை போட்டுதாக்கிய வாசன்!!

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் இணைந்து வெற்றிக்கூட்டணியை உருவாக்க தமாகா பாடுபடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

நாமக்கலில் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "2026 சட்டமன்றத் தேர்தலில் தமாகா வெற்றி பெறவேண்டும் என்ற உறுதியோடு வியூகங்களைத் தொடங்கியுள்ளோம். வரும் ஏப்ரல் மக்கள் விரோத திமுக ஆட்சியை கண்டித்து, தமிழகம் முழுவதும் மண்டல அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். திமுக அரசு பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாத செயலற்ற அரசாக உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவே இல்லை. 2026 சட்டமன்றத் தேர்தலை கணக்கில் கொண்டு, புதிய  புதிய தேவையற்ற பிரச்னைகளை எழுப்பி மத்திய அரசோடு தமிழக அரசு மோதலைக் கடைபிடிக்கிறது.


நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். திமுகவுக்கு எதிரான எதிர்மறை வாக்குகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. புதிய தேசிய கல்விக்கொள்கை பல்வேறு அறிஞர்களின் ஆலோசனைப்படிதான்  உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இதைத் தமிழக அரசு ஏற்க மறுக்கிறது. சர்வதேச அளவில் திறனை வளர்த்துக்கொள்ள மாணவர்கள் 3 மொழிகளைப் படிக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு கூடாது என்கிறது. மும்மொழிக்கு பதிலாக மூன்று வேலையும் சாராயம் குடிக்க தமிழகத்தில் அரசு சார்பில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.



மக்களவை தொகுதி மறு சீரமைப்பு என்பது எதிர்கால வளர்ச்சியைக் கொண்டு செய்யப்படுகிறது. இதுபற்றி இதுவரை அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் வராத நிலையில், திமுக கற்பனை செய்துகொண்டு போராட்டங்களை நடத்தி வருகிறது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் இணைந்து வெற்றிக்கூட்டணியை உருவாக்க தமாகா பாடுபடும். இக்கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்கூட்டணியாக வென்று ஆட்சி அமைக்கும். அதில் தமாகா எம்எல்ஏக்கள் சட்டமன்றத்துக்குச் செல்வார்கள்." என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாய்மூடி வேடிக்கை பார்க்கிறது தமிழக அரசு! ரயில்வே தேர்வு மைய விவகாரத்தில் சீமான் விளாசல்.

இதையும் படிங்க: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: கள்ள உறவால் துணிச்சல்… திமுக அரசை சுளுக்கெடுத்த விஜய்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share