×
 

விவசாயிகளுக்கு ஜாக்பாட்.... வேளாண் பட்ஜெட்டில் லட்ச லட்சமாய் பரிசுமழை...! 

வேளாண்மையில் அதிக உற்பத்திக்கும் தொழில்நுட்ப பயன்பாட்டிற்கும் ரொக்கப் பரிசுகள்  அறிவிக்கப்பட்டுள்ளன. 

வேளாண்மையில் அதிக உற்பத்திக்கும் தொழில்நுட்ப பயன்பாட்டிற்கும் ரொக்கப் பரிசுகள்  அறிவிக்கப்பட்டுள்ளன. 

கொட்டும் பரிசுகள்: 

சிறு தானியங்கள், பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு உள்ளிட்ட 11 பயிர்களில் நவீன வேளாண் தொழில்நுட்பங்களை கடைபிடித்து உயர் விளைச்சல் பெறும் உழவர்களை ஊக்குவிக்க மாநில அளவில் அதிக உற்பத்தினை பெறும் முதல் மூன்று உழவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரமும்,  இரண்டாம் பரிசாக ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும் பரிசாக  33 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் 2025- 26 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்பட மாநில அரசு நிதியில் இருந்து 55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க: மரணத்திற்கான இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்வு... வேளாண் பட்டிஜெட்டில் அதிரடி அறிவிப்பு...! 

 மேலும் நவீன வேளாண் கருவிகள், நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து கடைபிடிப்பதில் சிறந்து விளங்கும் மூன்று நபர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் இரண்டு லட்சத்து 50 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக ஒரு லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 நம்மாழ்வார் விருது : 

உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களை ஊக்கப்படுத்துவதற்கும் உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டு சிறப்பாக செயல்பட்டு இதர உழவர்களையும் உத்வேகத்துடன் உயிர்ம வேளாண்மையில் ஈடுபட செய்யும் உழவர்களை கௌரிப்பதற்காகவும் சிறந்த உயிர்ம உழவருக்கான  “நம்மாழ்வார் விருது” வழங்கும் திட்டம் 2023-24 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025-26 ஆம் ஆண்டிலும் இவ்வகையில் மூன்று உழவர்களுக்கு பாராட்டுப் பத்திரத்துடன் தலா ரெண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பயிர் பாதிப்பை குறைக்கவும், மண்வளத்தை மேம்படுத்த அதிக நீர் தேவையுடைய நெற்பயிர்க்கு மாற்றாக குறைந்த நீர் தேவையுடைய சிறு தானியங்கள், பயிர் வகைகள், எண்ணெய் வித்து பயிர்களை ஊக்கிவிக்கும் வகையில் “மாற்றுப்பயிர் சாகுபடி திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025 26 ஆம் ஆண்டிலும் ஒரு லட்சம் ஏக்கரில் மாற்றுப்பயிர் சாகுபடி திட்டம் ஒரு லட்சம் உழவர்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 12 கோடியே 50 லட்சம் மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 
 

இதையும் படிங்க: அடிதூள்... விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ.2000 நிதி... வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share