அரசு பள்ளி பாடத்திட்டத்தில் சதுரங்கம்; அடித்து தூள் கிளப்பும் தமிழ்நாடு அரசு...!
தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.46,760 கோடி ஒதுக்கீடு செய்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதில் உள்ள முக்கிய அறிவிப்புகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்...
மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையை வளர்த்திடவும், இளைய தலைமுறையினருக்கு புதிய தொழில்நுட்ப வசதிகளைத் தொடர்ந்து அறிமுகம் செய்திடும் நோக்கோடு, சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் இணைந்து நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட சென்னை அறிவியல் மையம் உருவாக்கப்படும். இம்மையத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப்புலங்கள் மட்டுமன்றி, விண்வெளி, வானவியல் துறைகளின் மெய்நிகர் மாதிரிகளும் இடம்பெற்றிருக்கும்.
குழந்தைகளுக்கான அறிவியல் பூங்கா, நவீன வானவியல் தொலைநோக்கு வசதிகள், ஆழ்கடல் உயிரினங்கள் மற்றும் வானவியல் நகர்வுகளை ஆழ்ந்து உணரக்கூடிய டிஜிட்டல் திரை திரை அனுபவ அரங்குகள். அறிவியல் மாநாட்டுக் கூடங்கள், பார்வையாளர்களுக்கான பசுமைப் புல்வெளிகள் என அனைத்து வசதிகளுடன் கூடிய பிரமாண்ட சென்னை அறிவியல் மையம் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் அரசு பங்களிப்புடன் உருவாக்கப்படும். பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.46,760 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திசையன் விளை, காங்கேயம், மணப்பாறை உள்ளிட்ட இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.46,760 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
பள்ளிப் பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டு:
பள்ளிப் பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டு 44வது செஸ் ஒலிம்பியாட்-2022, கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள்-2023, தெற்காசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப், ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை-2023 போன்ற பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு அரசால் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மும்மொழி கல்வி விஷயத்தில் ஒரே நாடகம்.. திமுக அரசை டாராக கிழித்த அன்புமணி ராமதாஸ்!
இன்று உலக அரங்கில் சதுரங்க விளையாட்டின் தலைநகராகத் தமிழ்நாடு விளங்குகிறது. இதுவரை இரண்டு உலக சாம்பியன்கள் மற்றும் 31 கிராண்ட் மாஸ்டர்கள் தமிழ் மண்ணிலிருந்து உருவாகியுள்ளனர். இந்த வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டும். மாணவர்களிடையே சதுரங்க விளையாட்டை ஊக்குவித்து பல சாம்பியன்களை எதிர்காலத்தில் உருவாக்கும் வகையிலும், பள்ளிப் பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டினைச் சேர்த்திடும் விதமாக, உடற்கல்விப் பாடத்திட்டம் உரிய வகையில் மாற்றியமைக்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழக பட்ஜெட் 2025... இதெல்லாம் கவனிச்சீங்களா..?