Tn Budget 2025: சட்டசபை காட்சிகள் நேரலை ஒளிபரப்பு.. வெறிச்சோடிய நாற்காலிகள்!
சட்டசபையில் நடைபெற்ற பட்ஜெட்டை பொதுமக்கள் நேரடியாக காணும் வகையில் எல்இடி டிவி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
2025 முதல் 2026 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் காலை 9.30 மணியளவில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். சுமார் இரண்டு மணி நேரம் 30 நிமிடங்கள் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில், பல்வேறு துறைகளுக்கு புதிதாக நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சட்டசபையில் நடைபெறும் பட்ஜெட்டை நேரலையாக பொதுமக்கள் காண்பதற்காக சுமார் நூறு இடங்களில் எல்.இ.டி தொலைக்காட்சிகள் அமைக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி மக்கள் வெயிலில் ஆதிக்குள்ளாகி விடக்கூடாது இந்த என நினைத்து, எல்இடி டிவிகளில் பொருத்தப்பட்ட இடங்களில் கொட்டகைகள் போடப்பட்டு, பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் நாற்காலிகளும் போடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: ஏய்... நிறுத்துங்க..! திருச்சி சிவா, வில்சனை கதறவிட்ட நிர்மலா சீதாராமன்
இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது அனைத்து எல்இடி டிவிகளிலும், சட்ட சபையில் நடைபெறுவது காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் அதனை காண்பதற்கு ஆள் இல்லாமல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடங்களில் வெறிச்சோடியாக காணப்பட்டன.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, நெட்டுசன்களின் வசை பாடலுக்கு உள்ளாகியுள்ளது. முன்னதாக பட்ஜெட் குறித்து பொதுமக்களுக்கு போதுமான தெளிவு மற்றும் அக்கறை இல்லை என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பண வீக்கம், விலை உயர்வு, வேலையின்மை இல்லையா? எந்த கிரகத்தில் வாழ்கிறார் நிர்மலா? பிரியங்கா ஆவேசம்