×
 

ஆர்டிஐ மூலம் தகவல் வழங்க மனு.. இழுத்தடித்த அலுவலர்.. தகவல் ஆணையம் கரார்!

ஐந்து ஆண்டுகளாக ஆர்டிஐயில் தகவல் தராமல் காலம் தாழ்த்திய போடி வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அலுவலருக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே, ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக தகவல் ஒன்றை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளார். இந்த நிலையில் தகவலை கொடுக்காமல்  போடி வட்டாட்சியர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நபர் தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் தகவல் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கானது மாநில தகவல் ஆணையர் பி.தாமரைக்கண்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த தகவல் ஆணையர், தேனி மாவட்டம் மேல சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் ராமகிருஷ்ணன் கடந்த ஐந்து ஆண்டுகளாக தகவல் வழங்காமல் இருந்து மன உளைச்சலை ஏற்படுத்திய காரணத்தால் இழப்பீடாக ஐந்தாயிரம் ரூபாய் எதிர் மனுதாரர் ஆன போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அலுவலர் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க: நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ கொலை வழக்கு - +1 மாணவன் கைது

 மேலும், தகவல் வழங்காமல் இழுத்து அடித்த பொது தகவல் அலுவலர் யார் என போடிநாயக்கனூர் வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் துணை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வடக்கில்  மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை வருகின்ற 29ஆம் தேதி தகவல் ஆணையத்தில் நேரில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மெக்சிகோவின் தரமான செய்கை... உச்சக்கட்ட பதற்றத்தில் டிரம்ப்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share