ஆவணங்களை திருப்பித் தர ரூ.5000 கேட்ட அதிகாரிகள்.. பிளான் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார்..
சென்னையில் பறிமுதல் செய்த ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு எண் சான்றிதழை திரும்ப ஒப்படைக்க லஞ்சம் வாங்கிய போக்குவரத்து துறை எஸ்ஐ மற்றும் தலைமை காவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையைச் சேர்ந்த வின்சென்ட் செல்வகுமார் என்பவர் கால் டாக்ஸி ஓட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி 5ஆம் தேதி கீழ்பாக்கம் நியூ ஆவடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, தவறுதலாக முன் சென்ற இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் அந்த பெண்ணுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது எஸ் ஐ லட்சுமண பெருமாள் மற்றும் தலைமை காவலர் விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் வின்சென்ட் செல்வகுமார் இடமிருந்து அவரின் அசல் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு எண் சான்றிதழை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் என்ன சான்றுகளை திரும்பி ஒப்படைப்பக்க ஐயாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். இதுகுறித்து வின்சென்ட் செல்வகுமார் சென்னையில் லஞ்ச ஒழிப்பு துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.15 லட்சம் கொடுத்து மனைவிக்கு ரயில்வேயில் வேலை.. விவாகரத்தால் வெளிவந்த ஊழல்.. பழி தீர்த்த கணவர்..!
அதிகாரிகளின் அறிவுரைப்படி வின்சென்ட் செல்வகுமார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை எஸ் ஐ லக்ஷ்மண பெருமாள் மற்றும் தலைமை காவலர் விஜயபாஸ்கர் ஆகியோர் வாங்கியுள்ளனர். இவர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இரு அதிகாரிகளிடமும் துறை ரீதியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: 37 ஆயிரம் லஞ்சம் பணத்துக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை தொலைத்த விஏஓ.. பக்கா ஸ்கெட்ச் போட்ட போலீஸ்..!