×
 

சென்னையில் திடீர் போக்குவரத்து மாற்றம்..! தேனாம்பேட்டை நோக்கி வாகனங்கள் செல்ல தடை..!

சென்னை தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை இடையே நாளை முதல் ஏப்ரல் 22 ஆம் தேதி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உள்ள ஜிஎஸ்டி சாலையில் நான்கு வழி மேம்பாலம் அமைய உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை சைதாப்பேட்டை செல்லும் வாகனங்கள் செனட் டாப் சாலை, டர்ன்புல்ஸ் சந்திப்பு வழியாக திருப்பி விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சைதாப்பேட்டையில் இருந்து சேமியர்ஸ் சாலை நோக்கி செல்ல அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஜி கே எம் பாலம் செனட் டாப் சாலையில் இருந்து வாகனங்கள் மட்டும் ஒரு வழி பாதையாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோட்டூர்புரத்திலிருந்து செனட் டாப் சாலை வழியாக தேனாம்பேட்டை செல்ல வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எமராஜாவாக மாறி வரும் யூனுஸ்..! பாடம் கற்பிக்க இந்தியாவுக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பு..!

இதையும் படிங்க: கந்து வட்டி புகார்... அமமுக நிர்வாகியை அலேக்காக தூக்கிய போலீஸ் ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share