×
 

புதுச்சேரி - திருப்பதி இடையே ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

புதுச்சேரி திருப்பதி இடையே இரு மார்க்கங்களிலும் இயக்கப்படவிருந்த ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் சேவையை அறிவித்தது. அதன்படி புதுச்சேரி திருப்பதி இடையே இன்று பிற்பகல் 3 மணி அளவிலும், நாளை காலை நான்கு மணி அளவில் இரு மார்க்கங்களிலும் சிறப்பு ரயிலானது இயக்கப்படவிருந்தது.

முன்னதாக இதற்கான ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்ட நிலையில் அனைத்து கட்ட சோதனைகளிலும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் ரயில்களில் இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இதையும் படிங்க: ஈரோடு - ஜோலார்பேட்டை ரயிலில் மாற்றம்.. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

அந்த அறிவிப்பில் இன்றும் நாளையும், இரு மாகங்களில் புதுச்சேரி திருப்பதி இடையே இயக்கப்பட விருந்த ரயில்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சமக்ர சிக்ஸா திட்டத்தில் தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை.. மத்திய அரசு ஒப்புதல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share