ட்ரம்ப் எபெக்ட்..! அமெரிக்கா வரி விதிப்பால் இந்தியாவின் ஜிடிபி 0.3% குறையும்: பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை..!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரிவிதிப்பால் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) 2025-26 நிதியாண்டில் 0.2% சதவீதம் முதல் 0.4% சதவீதம் வரை குறையும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பரஸ்பர வரிவிதிப்பு மூலம் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது 26% வரிவிதித்துள்ளார். இந்த வரிவிதிப்பால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு பெரிதாக இல்லாவிட்டாலும், சிறிதளவு குறையக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் ஆராய்சிக் குழு கூறுகையில் “ மத்திய அரசு பட்ஜெட்டில் 6.8% பொருளாதார வளர்ச்சி 2024-25ம் ஆண்டில் இருக்கும் எனக் கணக்கிடப்பட்ட நிலையில் அதிலிருந்து சிறிதளவு குறைந்து 6.6% மாகச் சரியும். பட்ஜெட்டில் இந்தியாவின் ஜிடிபி மதிப்பு ரூ.200.70 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ட்ரம்ப் வரிவிதிப்பால் ஜிடிபி மதிப்பு ரூ.200.30 லட்சம கோடியாக சிறிதளவு குறையும், பொருளாதார வளர்ச்சியையும் 6.6% சதவீதமாக சரியவைக்கும்” எனத் தெரிவித்துள்ளனர்.
பார்க்லேஸ் மதிப்பீட்டில் இந்தியாவின் ஜிடிபி நடப்பு 2025-26ம் ஆண்டில் 6.5 சதவீதமாக் குறையும் எனக் கணித்துள்ளது, அது மட்டுமல்லாமல் ஜிடிபியின் மதிப்பு ரூ.200.10 லட்சம் கோடியாகச் சரியும் எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தனிக்காட்டு ராஜா நித்யானந்தா இறந்துவிட்டார்..? உண்மையை போட்டுடைத்த சீடர்..!
பணவீக்கத்தைப் பொருத்தவரை பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஆய்வாளர்கள் கூறுகையில் “பணப்பரிமாற்றித்தில் மதிப்பு வீதத்தில் கடும் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதால், மொத்த விலைப் பணவீக்கத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எங்களின் கணக்கின்படி டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 10 சதவீதம் வரை சரியக்கூடும், இதனால் மொத்த விலைப் பணவீக்கம் 0.12 முதல் 0.16 வரை உயரும், நீண்டகாலத்தில் 0.38 முதல் 0.49 வரை அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளது.
நிதிக்கொள்கையைப் பொருத்தவரை எலாரா செக்யூரிட்டிஸ் பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி வீதத்தை நடப்புநிதியாண்டில் மேலும், 50 புள்ளிகள்வரை குறைக்கக்கூடும் என எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க விதித்துள்ள 26 சதவீதம் வரியால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 9 முதல் 11 சதவீதம் வரை பாதிக்கக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக மின்னணு சாதனங்கள், விலை உயர்ந்த கற்கள், எந்திரங்கள், ஆயத்த ஆடைகள், ஆகியவற்றின் ஏற்றுமதி பாதிக்கலாம் என்று பேங்க் ஆப் பரோடா வங்கி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த துறைகள்தான் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஏற்றுமதியில் பெரும்பங்கு வகிக்கிறார்கள்.
பார்க்லே பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில் “அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 11 சதவீதம் வரை குறையக்கூடும். 2024-25ம் ஆண்டில் அமெரி்க்காவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி ரூ.6.40 லட்சம் கோடியாக இருந்தது, இதிலிருந்து ரூ.64 ஆயிரம் கோடிவரை ஏற்றுமதி குறையக்கூடும். ஜனவரி 2025 வரை அமெரிக்காவுக்கு இந்தியா சார்பில் ரூ.5.76 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டைவிட, வரிவிதிப்பால் 10 சதவீதம் குறைந்துள்ளது. இப்போது புதிய வரிவிதிப்பால் மேலும் 10 சதவீதம் குறையும். ரூ.57ஆயிரம் கோடி முதல் ரூ.64 ஆயிரம் கோடிவரை குறையலாம்.
அதிபர் ட்ரம்ப் வரி விதிப்பால் இந்தியாவில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களின் விற்று முதல், வருவாயிலும் பாதிப்பை ஏற்படுத்தி குறைக்கக்கூடும். இதனால் அந்த நிறுவனங்கள் போட்டியைச் சமாளிக்க விலையைக் குறைக்க நேரிடலாம். இந்த நேரத்தில் வங்கிகள் இந்த நிறுவனங்களுக்குத் தேவையான ஆதரவை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மோசமான நிலையில் எல் சால்வடார் சிறை... டிரம்பால் நிரம்பி வழியும் கைதிகள்!!