த.வெ.க. பூத் கமிட்டி கருத்தரங்கம்..! விஜய் தேர்வு செய்த முதல் மண்டலம் இது தான்..!
கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல் 26 மற்றும் 27ம் தேதிகளில் தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் நடைபெற உள்ளது. மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் தொகுதிவாரியான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கிற்கு தமிழ்நாட்டில் முதல் மண்டலமாக கோவையை கட்சியின் தலைவர் விஜய் தேர்வு செய்துள்ளார். கோவையில் இரண்டு நாட்கள் நடைபெறும் பூத் கமிட்டி கருத்தரவின் விஜய் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: விஜய்க்கு எதிராக ஃபத்வா..! எந்த நிகழ்ச்சிக்கும் அவரை அழைக்காதீங்க.. ஜமாத் திட்டவட்டம்..!
இதையும் படிங்க: வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..! அண்ணல் அம்பேத்கருக்கு எடப்பாடி பழனிசாமி, விஜய் மரியாதை..!