தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.. ஸ்தம்பித்தது கோவை..!
பூத் கமிட்டி கூட்டத்திற்காக கோவை வந்தடைந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் பூத் கமிட்டி கூட்டம் கோவையில் நடைபெறுகிறது. பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விமானம் மூலம் கோவைக்கு சென்றடைந்தார். அவரின் வருகைக்காக காலை முதலே ஆரவாரத்துடன் காத்திருந்த தொண்டர்கள் விஜயை கண்டதும் தவெக... தவெக என ஆர்பரிப்புடன் முழக்கங்களை எழுப்பி வரவேற்றனர்.
திறந்த வாகனத்தில் நின்று தொண்டர்களை நோக்கி விஜய் கையசைத்தார். பிரசார வாகனத்தில் சென்ற விஜய்க்கு கட்சி துண்டு, மலர்கள் தூவி அட்டகாசமான வரவேற்பை கொடுத்தனர்.
இதையும் படிங்க: வீட்டை விட்டு வெளியே வரும் விஜய்... திடீர் கோவை பயணம் - வெளியானது பரபரப்பு காரணம்!
விமான நிலையத்தில் இருந்து நட்சத்திர ஹோட்டலுக்கு விஜய் சென்ற நிலையில், ஹோட்டலுக்கு முன்பாகவும் தொண்டர்கள் குவிந்தனர். முதல் முறையாக கோவைக்கு பயணம் செய்துள்ள விஜய், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு குரும்பம் பாளையத்தில் நடக்கும் பூத் கமிட்டி கூட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளார்.
இதையும் படிங்க: வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..! அண்ணல் அம்பேத்கருக்கு எடப்பாடி பழனிசாமி, விஜய் மரியாதை..!