×
 

கரடி தாக்கி இருவர் பலி.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் கோரிக்கை..!

தேனி மாவட்டம் அருகே மக்கள் வசப்படத்திற்குள் புகுந்த கரடி தாக்கியதில் இருவர் பலியாகினர்.

தேனி மாவட்டம் வருசநாடு அருகே தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் மணி மற்றும் தர்மராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இருவரது மனைவியும் உயிரிழந்த நிலையில் கோவில்பாறை கண்மாய் அருகே உள்ள அவர்களது நிலத்தில் கடந்த சில மாதங்களாக குடிபெயர்ந்து அருகில் இருந்த அவர்களது நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். மலைப்பகுதி என்பதால் அவ்வப்போது விவசாய நிலங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் இருந்தே வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் புகார் அளித்திருந்த நிலையில் வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இந்நிலையில் வழக்கம்போல் மணி மற்றும் கருப்பையா விவசாய நிலத்தில் வேலை செய்துவிட்டு மீண்டும் வீடு தரும்பியுள்ளனர். அப்போது இரவு 7 மணி அளவில் சாரல் மழை  பெய்துள்ளது. அதனால் மணிகண்டன் தோட்டத்தில் இருவரும் எலுமிச்சை பழங்கள் பறித்து இருசக்கர வாகனத்தில் ஏற்றுவதற்காக நடந்து சென்றுள்ளனர். அப்போது அவர்கள் சென்ற பாதையில் கரடி ஒன்று பதுங்கி இருந்துள்ளது. நிலையில் இவர்கள் மணிகண்டன் மற்றும் கருப்பையாவை கண்ட கரடி இருவரையும் தாக்கியுள்ளது. இதில் மணிகண்டன் மற்றும் கருப்பையா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

இதையும் படிங்க: சூட்கேஸில் பெண்ணின் சடலம்.. நாடகமாடிய தாய் - மகள் கைது..! சிக்கியது எப்படி?

பின்னர் அந்த கரடி அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், பொதுமக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கண்டமனூர் வனத்துறையினர் மற்றும் கடமலைகுண்டு போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கண்டமனூர் வனத்துறையினர் மற்றும் கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்த தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரடி தாக்கி பலர் உயிரிழந்து வருவதாக அப்பகுதி மலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வனத்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'பாசிசத்துக்கும்-பாயாசத்திற்கும் சண்டை..' இட்ஸ் வெரி ராங் ப்ரோ… திமுக- பாஜகவை வெளுத்தெடுத்த விஜய்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share