×
 

சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்.. ஆற்றில் மூழ்கி இரு சிறுமிகள் பலி..!

ஒகேனக்கல் பகுதியில் நீச்சல் தெரியாமல் ஆற்றில் இறங்கிய சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சுகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமானோர் அவரது குடும்பத்தினருடன் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். இந்த நிலையில் ஒகேனக்கல் பகுதிகளில் ஏராளமானோர் இன்று குடும்பங்களுடன் சுற்றுலாவிற்கு சென்றனர். அப்போது சிறுமிகள் இருவர் ஆற்றில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்த நிலையில் நொடி பொழுதில் அடித்துச் செல்லப்பட்டனர். இது குறித்து அங்கிருந்தோர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் திறமைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: வெள்ளாற்றில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழந்த சோகம்! கதறி துடித்த பெற்றோர்...

நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் தீயணைப்பு துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றினர். தொடர்ந்து உடல்களை உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். சுற்றுலா வந்த இடத்தில் சிறுமிகள் ஆற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வெறுங்காலுடன் 14 ஆண்டுகள் சபதம்… விசுவாசிக்கு செருப்பை அணிவித்து நெகிழ்ந்த மோடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share