×
 

கிடப்பில் இருக்கும் காரைக்கால் பேரளம் ரயில் பாதை.. நல்ல செய்தி சொன்ன ரயில்வே நிர்வாகம்..!

காரைக்கால் பேரளம் இடைய நடைபெற்று வந்த ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஏசி கட்டத்தை அடைந்துள்ளதால் பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

காரைக்கால் பேரளம் இடையேயான ரயில் சேவை என்பது ஒரு பெரும் வரலாறையே தனக்குள் புதைத்து வைத்திருக்கிறது என்றே சொல்லலாம். காரைக்கால் பேரளம் இடையே அப்போதைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் - பிரெஞ்சு ஆட்சியாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, 1898 ஆம் ஆண்டு ரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவையானது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் போக்குவரத்து தொழில் போன்ற பலவற்றிற்கும் பெரும் உறுதுணையாக இருந்தது. இந்த சேவையினால் அப்பகுதி மக்கள் காரைக்காலில் இருந்து பேரளம் மயிலாடுதுறை உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களுக்கு செல்லும் வாய்ப்பையும் மற்ற ஊர்களில் இருந்து காரைக்காலுக்கு வரும் வாய்ப்பும் கிடைக்கப்பெற்றது.

ஆனால் தூர்தர்ஷ்டவசமாக 1980 ஆம் ஆண்டு ரயில்வே நிர்வாகம் காரைக்கால் பேரளம் இடையே மீட்டர் கேஜ் பாதையை நிறுத்தி அதற்கான தண்டவாளத்தை அகற்றியது. அப்பகுதியில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் தொடர் போராட்டதினாலும் வலியுறுத்தலினாலும் இதனை புதுப்பிக்க திட்டமிட்ட தமிழக அரசு மத்திய அரசிடம் மனு கொடுத்து பல்வேறு கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இந்த சூழலில் தான், மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் - பேரளம் இடையே ரயில் சேவையை மீண்டும் துவக்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அந்த வகையில் கடந்தாண்டு நிதி நிலை அறிக்கையின் போது நிதி ஒதுக்கப்பட்டு சுமார் 23.55 கிலோமீட்டர் தொலைவிற்கு 320.64 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: சிறைக்குள் கைதிகளுக்கு செல்போன் எப்படி கிடைக்கிறது? நீதிமன்றத்தில் அரசு அளித்த விளக்கம்..!

இந்த திட்டமானது நிறைவேற்றப்பட்டால் நாட்டின் பல மாநிலங்களில் இருந்து நாகூர் வழியாக காரைக்காலுக்கும், மயிலாடுதுறை பேரளம் வழியாக காரைக்கால் திருநள்ளாருக்கும் பயணிகள் நேரடியாக வந்து சேர முடியும். குறிப்பாக வடமாநில வழிபாட்டு தலங்களுக்கும் நவகிரக தளங்களில் முக்கிய ஸ்தலமாக விளங்கும் சனீஸ்வர பகவான் கோயில் அமைந்துள்ள திருநள்ளாருக்கு போதிய வசதியின்றி பயணிகள் அவ்வப்போது அவதிக்குள்ளாகி வருகின்றனர். என்ன திட்டத்தின் மூலம் பயணிகள் திருநள்ளாறு வருவதற்கான நேரடி பாதையாகவும் எளிய வழியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் தமிழகப் பகுதி ஆன பேரெளத்தை இணைக்கும் வகையில் இந்த புதிய ரயில் பாதையில், ஒரு பெரிய மேம்பாலம் 77 சிறிய பாலங்கள் 21 சுரங்கப்பாதை மற்றும் ரயில்வே கேட் அமைப்புடன் பணிகளானது 2022 ஆண்டு ஜனவரி மாத முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பணிகள் 18 கிலோ மீட்டர் தொலைவுக்கு 90%, மீதமுள்ள 5.55 கிலோமீட்டர் தொலைவிற்கு 80 சதவீத பணிகளும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தண்டவாள பணிகளை தாண்டி தரைபால பணிகளும் நிறைவாக நடைபெற்று வருகிறது. அதன்படி காரைக்கால் மாவட்டத்திற்கு உட்பட்ட தண்டவாளம் பாலம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளும் முற்றிலுமாக நிறைவு பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்டு சில இடங்களில் ரயில்வே பணிகள் நடைபெற்று வருவதாகவும், மின் மயமாக்களுக்கான கம்பிகள் அமைத்தல், தூண்கள் நிறுவுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த திட்டம் பொங்கல் பண்டிகையின் போது முடிவடைந்து திறக்கப்படும் என்றும் பயன்பாட்டிற்கு வரும் என எண்ணப்பட்டிருந்த சூழலில் காலம் தாழ்த்தப்பட்டது. மேலும் இந்தத் திட்டத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: போலீசுக்கே கத்தி குத்து.. தப்பு முயன்றவர்களை மடக்கி பிடித்த போலீசார்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share