×
 

வெட்கமா இல்லையா உங்களுக்கு? ஓபன் மைக்கில் வெளியிடுவேன்! அதிரடி காட்டிய வருண் ஐபிஎஸ்..!

பெண்ணிடம் அவமரியாதையாக பேசிய எஸ்.எஸ்.ஐ பெண் அதிகாரியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டி.ஐ.ஜி வருண் குமார் ஐ.பி.எஸ். அதிரடி காட்டியுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் சுமதி என்ற உதவி ஆய்வாளர் ஒருவர் புகார் அளிக்க வந்த பெண்ணை அவமதித்து பேசிய ஆடியோ ஒன்றை சரக டி.ஐ.ஜி வருண் குமார் வெளியிட்டு, சம்பந்தபட்ட காவல் நிலைய காவலர்களை வாக்கி டாக்கியின் மூலம் நேரடியாக கண்டித்தார்.

அதன்பின்பு உதவி ஆய்வாளர் சுமதியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதுடன், அவருடைய அலுவலகத்தில், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, வரக்கூடிய நபர்களிடம் கனிவாகப் பேசிப் புகார் பெறும் வகையில் பணியை உதவி ஆய்வாளர் சுமதிக்கு ஒதுக்கியிருக்கிறார் டி.ஐ.ஜி வருண் குமார்.

அதுமட்டுமின்றி, இதுபோன்று ஒழுங்கீனமாக புகார்தாரர்களிடம் பேசுவது தொடர்பான ஆடியோ கிடைத்தால், அவற்றையும் ஓபன் மைக்கில் வெளியிடுவேன் என்று திருச்சி சரகத்தில் இருக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கு அவர், எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டி.ஐ.ஜி வருண் குமார் பேசிய உரையாடலில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அரசாங்கம் எதற்காக உருவாக்குச்சு என வருண் குமார் கேட்க,மகளிர் பிரச்சனைகளில் இருந்தவங்களுக்காக உருவாக்கப்பட்டது சார் என அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கூறியபடி தொடங்கியது. அதன் பிறகு கேள்வி மேல் கேள்வி கேட்டதுடன் நேரடியாக அதிரடி மாற்றங்களை செய்தார் டிஐஜி வருண் குமார்.

இதையும் படிங்க: அடுத்தடுத்து 4 வீடுகளில் கைவரிசை.. 57 சவரன் நகைகள் மாயம்.. கொள்ளையர்களுக்கு போலீசார் வலை..!

உங்கள் ஸ்டேஷனில் சுமதின்னு யாரும் இருக்காங்களா, அந்த அம்மாவை எல்லாம் சஸ்பெண்ட் பண்ணனும், ரேப் கேஸ் கம்ப்ளைண்ட் ஓட ஒரு லேடி ஸ்டேஷனுக்கு வந்தால் அசிங்கமாகப் பேசியிருக்காங்க. எஸ்.பி.ஆபிஸுக்கு கேட்டுச்சா? அஜாக்கிரதையா பேசல. அயோக்கியத்தனமாகப் பேசுறாங்க. இப்படி பேசுறதுக்கு தான் அனைத்து மகளிர் காவல் நிலையம் உருவாக்குனாங்களா என கூறினார்.மேலும், வெட்கமா இல்லை உங்களுக்கெல்லாம்.

தெரியாமா பேசியிருப்பாங்கன்னு சொல்லிறீங்க. நீங்கள் தான் முதல் குற்றவாளி. பேசுனது தப்புன்னு சொல்லமுடியல என்ன ஆய்வாளர் நீங்க மைக்கில் பதில்சொல்றீங்களா. நேரில் வந்து நிற்க வைக்கவா என கடுமையாக பேசி இருந்தார்.

தொடர்ந்து எஸ்.பி அலுவலகத்தை தொடர்பு கொண்ட வருண் குமார், உடனே அந்த அம்மாவை ரேஞ்ச் ஆபிஸுக்கு அனுப்புங்க. மனுக்களை அட்டென்ட் செய்ய வைக்கிறேன். அதற்கு பிறகு தொலைவு மாவட்டமான ராமநாதபுரம், கன்னியாகுமரி, தருமபுரிக்கு போவாங்க.

இந்த மாதிரி காவல் துறையில் அத்துமீறல் பேச்சு இருந்துச்சுன்னா, மைக்கில் வந்து அந்த ஆடியோ பிளே செய்யப்படும் என மாவட்டத்துக்கு சொல்லிடுங்க என்று வாக்கி டாக்கியில் பேசியவாறே உத்தரவு பிறப்பித்தார் டி.ஐ.ஜி வருண்குமார் ஐ.பி.எஸ்.

இதையும் படிங்க: மருமகளின் கள்ளக்காதலை கண்டித்த மாமனார்.. கூலிப்படை ஏவி கொன்ற கள்ளக்காதலன்.. மரணத்தில் விலகிய மர்மம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share