×
 

கர்ப்ப பையே போச்சு..! பகீர் கிளப்பும் வீரலட்சுமி..உண்மை என்ன?

தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி நடிகை விஜயலட்சுமியுடன் கைகோர்க்கப் போவதாக வெளியான தகவல் நாம் தமிழர் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமானுக்கு பின்னடைவை அளிக்கக்கூடிய தீர்ப்பு வந்தாலும் உச்ச நீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதனால் சீமான் தற்போது சற்று ஆறுதல் அடைந்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது கருத்தை தெரிவித்த தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி என்பவர் மீண்டும் களத்திற்கு வந்துள்ளார். 

அதில் நடிகை என்னை தொடர்பு கொண்டு என் மீது கோபப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார் தற்போது இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து மீண்டும் போராடலாம் என்றார். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு மட்டுமல்ல எந்த பெண்ணுக்கும் இந்த வீரலட்சுமி உறுதுணையாக நிற்பாள், அந்த நடிகைக்கு நீதி கிடைக்க நானும் எனது தமிழர் முன்னேற்ற படையும் உறுதியாக துணை நிற்போம் என வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் ஏழு முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதால் நடிகையின் கர்ப்பப்பை எடுத்து விட வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக வீரலட்சுமி  அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட நடிகையின் கர்ப்பப்பை அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அதை அகற்றாவிட்டால் அவருடைய உடல் நலனுக்கு மிகப்பெரிய கேடு ஏற்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்தும் விவகாரம்.. தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல்..

இது தனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருப்பதாகவும் பெண்மையை போற்றுகிறவர்களும் மதிக்கிறவர்களும் நடிகைக்கு ஆதரவாக இருப்பதாகவும் வீரலட்சுமி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட இந்த நடிகைக்கு நிச்சயம் நீதி கிடைக்கும், இந்த நீதி நடிகைக்கு விரைவாக கிடைக்க எனது தமிழர் முன்னேற்ற படை சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது என்றும் வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.

தமிழர் முன்னேற்றப்படை தலைவர் என்று சொல்லப்படும் இந்த வீரலட்சுமி கடந்தமுறை பிரச்சனை தீவிரம் அடைந்தபோது விஜயலட்சுமி உடனே வலம் வந்தார் அப்போது திடீரென இருவரும் சண்டை போட்டுக் கொள்ளும் காட்சிகளும் ஆடியோக்களும் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.

சம்பந்தப்பட்ட நடிகை இனி வீரலட்சுமி இந்த விஷயத்தில் தலையிடக்கூடாது நானே எனது போராட்டத்தை பார்த்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பணம் பறிக்கும் நோக்கில் சிலர் செயல்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகும் அந்த நடிகை அப்போது குறிப்பிட்டிருந்தார்.

மீண்டும் வீரலட்சுமி அந்த நடிகையுடன் கைகோர்க்கப் போவதாகவும் அந்த நடிகை பேசியதாக, கூறப்படுவதற்கு எந்த சரியான ஆதாரங்கள் கொடுக்கப்படவில்லை என்றாலும், வீரலட்சுமியின் இந்த பகீர் புகார் நாம் தமிழர் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: தொட முடியாத உயரத்தில் திமுக..! வெளியானது ஈரோடு கருத்துக்கணிப்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share