×
 

'What Bro...Its Very Wrong Bro..' - கோவை விமான நிலையத்தை டேமேஜ் செய்த விஜய் ரசிகர்கள்!

கோவை விமான நிலையத்தில் பேக் டிராலியை சூறையாடிய தவெக தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாட்டில் கலந்து கொள்ள அக்கட்சியின் தலைவர் விஜய் கோவை விமான நிலையம் வந்தார்.  அப்போது அவரை காண்பதற்காக அக்கட்சித் தொண்டர்களும்,  ரசிகர்களும் ஏராளமானோர் கூடியதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் விமான நிலையத்தில் இருந்த மத்திய பாதுகாப்பு படையினரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.  இதனிடையே  விஜயை காண குவிந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அங்கு விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் தங்கள் உடைமைகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தும் பேக் ட்ராலி மீது ஏறி நின்று விஜயை பார்த்தனர்.  இதில் ட்ராலிகள் மற்றும் அங்கிருந்த தடுப்புகள் பலத்த சேதமடைந்தது.

இதையும் படிங்க: இன்னும் என்னவெல்லாம் செய்ய போறானுங்களோ.. விஜய் பயணம் குறித்து விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்!!

மேலும் விஜயை காண வந்த தொண்டர்கள்,  ரசிகர்களின் செருப்புகள் கூட்டத்தில் தவற விட்டுச் சென்றனர். அதேபோல் விஜய்யை விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்ல வந்த வேனை  கண்டதும் அவர் வந்துவிட்டதாக கருதி வாகனத்தை நோக்கி அங்கும், இங்கும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஓடியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.  

மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற மத்திய பாதுகாப்பு படை மற்றும் போலீசாரை நோக்கி கடும் கூச்சலிலும் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: விஜயால் பாதிக்கப்பட்ட அவிநாசி மக்கள்... காரணம் இதுதான்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share