×
 

நடிகையின் இடுப்பை கிள்ளிய விஜய்.. அண்ணாமலையின் விமர்சனத்துக்கு சீமான் கொடுத்த ரியாக்சன்..!

அது என் தம்பி அண்ணாமலையின் கருத்து. இதையெல்லாம் பார்த்து சிரித்துக் கொண்டு போய் விட வேண்டும்.

''விஜய் குறித்து கூற்யது என் தம்பி அண்ணாமலையின் கருத்து. இதையெல்லாம் பார்த்து சிரித்துக் கொண்டு போய் விட வேண்டும்'' என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அது அவருடைய தொழில், தேர்வு. அவர் திரைப்படத்துறையில் இருப்பதால் அவர் படப்பிடிப்புக்கு செல்கிறார். எங்களை மாதிரி தினமும் வராமல் இருக்க அவருக்கு நேரம் இல்லாமல் இருக்கலாம். ஒரு நாள் அவரும் வருவார். வர வேண்டியது இருக்கும். வருவார். அதை நாம் குறையாக சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அது என் தம்பி அண்ணாமலையின் கருத்து. இதையெல்லாம் பார்த்து சிரித்துக் கொண்டு போய் விட வேண்டும். நான் இல்லாத 'பி' டீமா? என்னைத்தான் ரொம்ப நாளாக  பாஜகவின் 'பி' டீம் என்கிறார்கள். நான் எங்கே 'பி' டீமாக இருந்தேன்?

 பாஜகவி 'ஏ' டீம் திமுக. அதனால் என்னை 'பி' டீமாக சொன்னார்கள். வாய்க்கு வந்ததை சொல்வதுதான். ஒருத்தருக்கு ஒருத்தர்  பேசிக்கொள்ளும்போது,  அவர் அந்த டீம், இவர் இந்த டீம் என்கிறார்கள். ஆனால் நான் எந்த டீமும் இல்லை. நான் சொந்த டீம். எங்க டீம் தனியாகத்தான் மோதும். தனியாகத்தான் ஆடுவோம்.  அதனால், சொல்கிறவர்கள் கொஞ்ச நாள் சொல்வார்கள். அவ்வளவுதான். இதெல்லாம் ஒரு சிக்கலா?

இதையும் படிங்க: கருணாநிதியிடம் கையேந்தியவர்.. சிறுநீர் பாசனத்தை அறிமுகப்படுத்தியவர்.. ஹெச்.ராஜாவை விடுகதை போட்டு திட்டும் தவெக!!

குஜராத்தில் ஒரு மீனவரை பாகிஸ்தான் கடற்படை கைது செய்து அழைத்துச் சென்றது. இந்திய கடற்படை ராணுவம் விரட்டிப் போய் தடுத்து மீட்டுக் கொண்டு வந்தது. குறைந்தது 840 மீனவர்கள் இலங்கைச் சிறையில் இருக்கிறார்கள். இன்னும் 150, 200 பேருக்கு மேல் சிறைக்குள் கிடைக்கிறார். 12 பேரை ஒரே சங்கிலியில் அழைத்துச் சென்ற காட்சியை அனைவரும் பார்த்தோம். எல்லை தாண்டி வருகிறார்கள் என்கின்றனர். இதுதான் கடலில் எல்லை என்று இருக்கிறதா? எங்களுக்கு மீன்பிடிக்க உரிமை இருக்கிறதா? இல்லையா?

இந்த நாட்டின் குடிமகன் நாங்கள் இல்லையா? ஏன் குஜராத்தில் ஒரு மீனவருக்கு இருக்கிற பாதுகாப்பு, உரிமை, அவன் உயிர் மீது இருக்கிற அக்கறை இத்தனை மீனவர்கள் தமிழக மீனவர்கள் சுடப்படும் போது, சிறை பிடிக்கப்படும் போது, படகுகளை பறித்து ஏலம் விடும் போது தடுத்திருக்க வேண்டும் அல்லவா? ஒரு படகின் விலை என்ன? ஒரே மீனவன் வாங்கினதா? அது கடன் பெற்று வாங்கியது. 10, 15 மீனவர்கள் சேர்ந்து கூட்டாக வாங்கியது. அதை பறித்தவன் ஏலம் விட்டு விடுகிறான். என் வாழ்வாதாரம் என்ன ஆவது? நான் எங்கே வாழ்வது?

இதையெல்லாம் கேட்காமல் நடவடிக்கை எடுக்கிறோம், நடவடிக்கை எடுக்கிறோம் என்றால் என்ன நடவடிக்கை? நடுக்கடலில் வைத்துக் கொல்வது, கடத்தி சென்று சிறையில் போடுவது, இதுதான் நடவடிக்கையா? மீனவர்கள் ராமேஸ்வரத்தில் பட்டினி போராட்டத்தை தொடர்ந்தார்களா? இல்லையா? பிரச்சனை தீர்க்கப்படுவது என்றால் போராட வேண்டிய தேவை ஏன் வருகிறது ? பொழுதுபோக்கிற்காக போராடுகிறார்களா? பிழைக்க முடியவில்லை என்று போராடுகிறோமா? இல்லை பொழுது போகவில்லை என்று போராடிறார்களா? 

படிக்கிற பிள்ளைகளைப் பற்றி கவலைப்படவில்லை. குடிக்கிற வருமானம் குறைந்தால் அதற்கு ஆய்வு நடத்துகிறீர்கள். குடிக்க வருகிறவர்களின் எண்ணிக்கையை பெருக்குவதற்கு திட்டங்களை தீட்டுகிறீர்கள். டாஸ்மாக் ஊழலை  கவனிக்கின்ற மக்கள், எதற்காக திமுக அரசு நீதிமன்றம் போக வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். ஊழல் நடந்திருக்கிறது, அதை ஏற்றுக் கொள்கிற ஒரு குணம் இல்லை, பக்குவம் இல்லை. சரி, இது தவறு. இதை சரி பண்ணுவோம் என்று தோன்றவில்லை.

முதலில் ஒரு லட்சம் கோடி ஊழல் என்றார்கள். பிறகு ஒரு வாரத்திற்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை. ஆயிரம் கோடி என்றார்கள். கடைசியாக முடிக்கும் போது 100 கோடியாக கூட வரும். இல்லையென்றால் அப்படியெல்லாம் நடக்கவில்லை, அதெல்லாம் சும்மா சொன்னார்கள் என்று கூறுவார்கள். யார் சொன்னா? நாங்கள் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்று கூட சொல்வார்கள்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விஜய்யை விளாசிய அண்ணாமலை... பதிலடி கொடுத்த புஸ்ஸி ஆனந்த்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share