×
 

பெண்கள் முன்னதாகவே HPV தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் - VIT பேராசிரியை எச்சரிக்கை

பெண்கள் முன்னதாகவே எச்பி வி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என விஐடி பல்கலைக்கழகம் பேராசிரியை அறிவுறுத்தியுள்ளார்.

வி.ஐ.டி பல்கலைக்கழகம் (Vellore Institute of Technology), பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றம் ஆகியவை இணைந்து தமிழ்நாடு அரசின் அவ்வையார் விருது பெற்ற முன்னாள் துணை வேந்தர் யசோதா சண்முகசுந்தரத்திற்கு பாராட்டு விழா நடத்தியது. இதில், முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம், புலவர் பதுமனார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், "பேராசிரியர்கள் யசோதா, சண்முகசுந்தரம் ஆகிய இருவரும் துணை வேந்தர்களாக இருந்தனர். இந்தியாவில் கணவன், மனைவி இருவரும் துணை வேந்தர்கள் என்பது இவர்களை தவிர வேறு யாரும் கிடையாது. இந்தியாவிலேயே துணை வேந்தர், பதிவாளர் இருவரும் பெண்களாக இருப்பது வி.ஐ.டி.,யில் தான். பெண்களின் கல்வி மேம்பாட்டிற்கு பாடுபட்ட யசோதா சண்முகசுந்தரத்திற்கு அவ்வையார் விருது வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி.

இதையும் படிங்க: குமரியில் களைகட்டிய குருத்தோலை பவனி விழா.. ஆலயங்களில் குவிந்த பக்தர்கள்..!

அதைத்தொடர்ந்து, அவ்வையார் விருது பெற்ற பேராசிரியை யசோதா சண்முகசுந்தரம் பேசுகையில், "எனது பள்ளிக்காலத்தில் பெண்கள் கல்வி பயில்வது மிகவும் சிரமமாக இருந்தது. எனினும், எனது பெற்றோர் அளித்த ஊக்குவிப்பால் என்னால் எண்ணியதை படிக்க முடிந்தது. சுதந்திரத்துக்கு முன்பு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி மேன்மையாக இருந்தாலும், தமிழ் வழிக்கல்வியில் தூய தமிழில் தான் வகுப்புகள் எடுக்கப்பட்டன.

தற்போது, பெண்களிடையே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. இதனை முன்கூட்டியே ஹெச்பிவி தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியமாகும். இதற்காக நடப்பு நிதியாண்டு தமிழக நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த தடுப்பூசியை 14 முதல் 15 வயது மாணவிகள் போட்டுக் கொள்ளலாம். எந்தவொரு பக்க விளைவும் ஏற்படாது. இந்த தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் 9 வகையான புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு பெற முடியும்.

மேலும், வளர்ந்த நாடுகளின் பல்கலைக்கழகங்களில் இந்த வகை தடுப்பூசி போட்ட மாணவிகளுக்குத்தான் சேர்க்கை வழங்கப்படுகிறது. எனவே, வேலூர் மாவட்டத்தில் உள்ள மாணவிகளுக்கு இந்த வகை தடுப்பூசி செலுத்த வி.ஐ.டி முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்," எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஓடிப்போன பெண்ணுடன் கட்டாயக் கல்யாணம்… மீண்டும் ஓடினால்..? அதற்கும் தயாரான பாஜக..! கடும் விமர்சனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share