2026ல் அம்பேல்... தவிடு பொடியான விஜய்யின் அரசியல் கணக்கு... தவிக்கும் தவெக
2026ம் ஆண்டு தேர்தலை விஜய் கோட்டை விட்டுவிட்டதாக வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை அதிமுகவுடன் இணைந்து எதிர்கொள்ள உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. தேசிய அளவிலான கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் வெற்றி பெற கண்டிப்பாக மாநில கட்சியின் உதவி தேவை என்பதை ஏற்றுக்கொண்ட பாஜக தலைமை, விடாப்பிடியாக நின்று அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
ஆனால் கட்சி ஆரம்பித்து 2ம் ஆண்டுக்குள் கால் வைத்துள்ள விஜய், 2026ம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கண்டுவிட வேண்டும் என பகல் கனவு கண்டு வருகிறார். அவரது தமிழக வெற்றிக் கழகத்திற்கு 20 சதவீத வாக்கு வங்கியிருப்பதாக பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார். இதனால் அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைக்கும் பட்சத்தில் 2026ம் ஆண்டு தேர்தலில் அமோக வெற்றி பெற்று, துணை முதல்வர் பதவி கூட கிடைக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர்.
இதையும் படிங்க: இனி உங்க நாடகம் எடுபடாது; தக்க பதிலடி கொடுப்போம்... திமுகவை சாடிய விஜய்!!
ஆனால் தற்போது பாஜக - அதிமுக கூட்டணி உறுதியாகியுள்ளது. ஏற்கனவே திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என விஜய் படுஓபனாகவே அறிவித்திருந்தார். அந்த வகையில் அவர் இனி தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பிடிக்க வாய்ப்பில்லை. திமுகவுடன் கூட்டணி வைக்கமாட்டார். இதனால் தனித்து களம் கண்டு தனது வாக்குசதவீதத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியுள்ளார். இதன் மூலம் விஜயின் அரசியல் கனவு தவிடுபொடியாகியுள்ளதாக வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பனையூரில் இரும்புக்கதவை பூட்டிக்கொண்டு ஒன்றுக்கும் உதவாத தமிழக வார்டு மெம்பர் அளவில் கூட அரசியல் அறிவற்ற புதுச்சேரி அரசியல்வாதி புஸ்ஸி ஆனந்தையும், அன்புமணி ராமதாஸையும், சித்தராமையாவையும் ஜான் ஆரோக்கியசாமி என்கிற உலகமகா ஸ்ட்ராஜிஸ்ட்டையும் நம்பி, 20% வரை வாக்குகள் இருக்கிறது அதிமுகவுடன் கூட்டு வைத்தால் நல்ல எதிர்காலம் என நாங்கள் சொன்னதை கேட்காமல் இந்த இரு ஞானசூஞங்களை நம்பி கோட்டைவிட்டார் விஜய். இது தகர்ந்து, இதனால் நான் கடந்த ஜனவரி முதல் விஜய் பெரிதாகவும் பேசவில்லை . வைகோ, விஜயகாந்த், முதல் விஜய் வரை தமிழகத்தில் மாற்று அரசியல் வரும் என் போன்றவர்கள் நம்பிக்கை கொண்டோம். அந்த நம்பிய நோக்கில் வெற்றி பெற பெற முடியவில்லை. என்ன செய்வது ⁉️வருத்தமான கையறு நிலை….என்ன சொல்ல…..!
அரசியல் ஒன்றும் சினிமா அல்ல, ஒரு படத்தில் விட்டால் அடுத்த படத்தில் பிடிக்க. இப்போது என்ன செய்வார் விஜய். 2026 ஐ மறந்து விட வேண்டியதுதான், அடுத்து 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். பாண்டிச்சேரி அரசியல்வாதியையெல்லாம் தமிழகத்தில் அரசியல் செய்ய வைத்தால் இதுதான் நிலை...” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கொஞ்சமாவது படிங்க விஜய்..! சட்டம் தெரியாத அரசியல் தற்குறிகள்… கிழித்தெடுத்த ஹெச்.ராஜா..!