வக்ஃபு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு..! 5 ஆயிரம் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம்..!
வக்ஃபு திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி வேலூரில் 5 ஆயிரம் இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் வக்பு திருத்த சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், மத்திய அரசின் பதிலில் திருப்தி இல்லை என்றும் புதிய சட்ட திருத்தத்தின் படி உறுப்பினர்களை நியமிக்க கூடாது என்றும் கூறி இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
ஆட்சேபனை தெரிவித்த நிலையிலும் கூட, மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது. வக்ஃபு திருத்த சட்டம் மத சுதந்திரத்தில் தலையிடுவதாக கூறி தொடர்ந்து எதிர்ப்பு நீடித்து வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வேலூரில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் ஐந்தாயிரம் இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், மத்திய அரசின் வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டனம் முழக்கங்களையும் எழுப்பினர். வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த பிறகு பேரணாம்பட்டு பகுதியில் இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: வேலூர் கிராமத்தில் வெடிக்கும் வக்பு சொத்து சர்ச்சை.. கொதிக்கும் மக்கள்.. விசாரிக்கும் அரசு.. பாஜகவின் வார்னிங்!
இதையும் படிங்க: இது வக்ஃபு வாரிய சொத்து... ஊரை காலி செய்யுங்கள்: தமிழக கிராமத்துக்கு வந்த நோட்டீஸால் பரபரப்பு..!