களத்தில் தொண்டர்கள்... திருச்சியில் தவெக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு..!
சமயபுரம் மாரியம்மன் கோவில் தெற்கு வாசலில் தவெக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கபட்டது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சமயபுரத்தில் கோடை வெயிலை சமாளிக்க தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தண்ணீர் பந்தல் அமைத்து தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் நீர் மோர் வழங்கினர். தமிழகம் முழுவதும் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்குமாறு நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவிட்டார்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சமயபுரம் நகர கழகம் சார்பில் நகரக் கழக செயலாளர் சிங்காரவேல் ஏற்பாட்டில் சமயபுரம் மாரியம்மன் கோவில் தெற்கு வாசல் பகுதியில் தண்ணீர் பந்தலை தவெக மேற்கு மாவட்ட செயலாளர் ரவிசங்கர் திறந்து வைத்தார். சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்கள், வெள்ளரிக்காய், நீர் மோர், தண்ணீர் ஆகியவற்றை தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் வழங்கினார்.
இதையும் படிங்க: வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா: தவெக சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்..!
இதையும் படிங்க: குடியிருப்பு பகுதிகள் அருகே மதுபான கடைகள்.. தவெக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்..!