என்னது! இந்தியாவில் லாரி ஓட்டுநர்கள் 55% பேருக்கு பார்வைக் குறைபாடு: ஆய்வில் தகவல்
இந்தியாவில் உள்ள டிரக் ஓட்டுநர்களில் 55.1 சதவீதம் பேருக்கு பார்வைக் குறைபாடு இருக்கிறது, 53.3% பேருக்கு தொலைவில் உள்ளதைப் பார்ப்பதில் சிக்கல் இருக்கிறது, 46% பேருக்கு அருகே இருக்கும் பொருட்களைப் பார்ப்பதில் சிரமம் இருக்கிறது.
டெல்லி ஐஐடி சார்பில் ஆய்வு நடத்தி 28ம்தேதி(நேற்று) இந்த அறிக்கை வெளியிடப்பட்டுல்ளது. இந்த ஆய்வில் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம் ஆகிய டிரக் ஓட்டுநர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு இந்த ஆய்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டெல்லி ஐஐடி கல்வி நிறுவனம் மற்றும் ஃபார்சைட் அறக்கட்டளை ஆகியவை சேர்ந்து ஓட்டுநர்களுக்கு கண்பரிசோதனை நடத்தியுள்ளன.
இந்த அறிக்கையில் பல முக்கிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது: லாரி ஓட்டுநர்களில் 44.3 சதவீதம் பேரின் உடல் எடை அவர்களின் உயர்த்துக்கு அதிகமாக இருக்கிறது, அதாவது அவர்களின் பிஎம்ஐ அதிகரித்துள்ளது. 57.4 சதவீதம் ஓட்டுநர்களுக்கு உயர் ரத்தஅழுத்தமும்,18.4 சதவீதம் ஓட்டுநர்களுக்கு அதிக ரத்தச்சர்க்கரை நோயும் இருக்கிறது.
இதோடுதான் இவர்கள் லாரிகளை மாநிலம் விட்டு மாநிலம் இயக்கி வருகிறார்கள். ஓட்டுநர்களில் 33 சதவீதம் பேருக்கு மிதமான மனஅழுத்தத்தோடுதான் பணியாற்றி வருகிறார்கள், 29 சதவீதம் பேர் அதிகமான மன அழுத்தத்திலும் லாரிகளை இயக்கி வருகிறார்கள். இவர்களுக்கு உடனடியாக மருத்துவ,மனநல ஆலோசனை தேவை என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வார விடுமுறை - 1,220 சிறப்பு பேருந்துகள் இயக்கம்...
இந்த அறிக்கையை மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று டெல்லியில் வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில் “ சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் 15 முதல் 20 சதவீதம் லாரி மற்றும் சரக்குப் போக்குவரத்தால் ஏற்படுகிறது, சாலைப் போக்குவரத்தில் இந்தியா பல சவால்களை எதிர்கொள்கிறது. சாலைப் போக்குவரத்தில் ஓட்டுநர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். 100 லாரிகளுக்கு 75 ஓட்டுநர்கள்தான் இருக்கிறார்கள். ஆதலால், இதை கருத்தில் கொண்டு இளைஞர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளித்தல், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் பயிற்சி அளிக்கப்படும்.
லாரிகள்தான் இந்திய சரக்குப் போக்குவரத்தின் முதுகெலும்பாக இருந்து வருகிறது. நாட்டின் ஒருபகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு சரக்குகளை கொண்டு செல்ல டிரக், லாரி போக்குவரத்து முக்கியமானது. லாரி ஓட்டுநர்கள் பலதரப்பட்ட சவால்களையும், வேறுபட்ட வாழ்க்கை நடைமுறைகளையும் வைத்துள்ளனர். நீண்ட வேலைநேரம், முறையற்ற ஷிப்ட், குடும்பத்தைவிட்டு பிரிந்து இருப்பதால் உடலில் ஏற்படும் சிக்கல்கல், குறைபாடுகள் வருகின்றன”எ னத்தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆரம்பித்துவிட்டார்கள் தோழர்கள்.... ஜன.9 போக்குவரத்து தொழிற்சங்க போராட்டம்...