×
 

தேசிய பாதுகாப்பு படை டிக் அடித்த 40 பேர்... நாளை பிரதமரைச் சந்திக்கப் போகும் தமிழக பிரபலங்கள் யார், யார்?

மதுரை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடி யாரை எல்லாம் சந்திக்கவுள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் 550 கோடி ரூபாய் செலவு ரயில்வே துறை சார்பாக புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி நாளைய ராமேஸ்வரம் வருகிறார். 

இலங்கையில் இருந்து தனி விமானம் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் இறங்குதலத்திற்கு வந்தடையும் பிரதமர் மோடி, அங்கிருந்து பாம்பன் பாலத்தை திறந்து வைப்பது அதேபோல பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருக்கிறார்.  இதற்கான பாதுகாப்பு பணிக்காக 3500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

பிரத,மர் மோடி தமிழக வரவுள்ளதால் ராமேஸ்வரம் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது கிட்டத்தட்ட 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் தமிழக வருகையின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சந்திக்க அனுமதி கேட்டிருந்ததாகவும், இதில் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 

இதையும் படிங்க: BIMSTEC உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.. பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க மாநாடு உதவும் - மோடி..!

இதனிடையே, நாளை மதுரை வரும் பிரதமர் மோடியை யாரெல்லாம் வரவேற்கவுள்ளனர். பிரதமரைச் சந்திக்க யாருக்கு எல்லாம் தேசிய பாதுகாப்பு படை அனுமதி அளித்துள்ளது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன. நாளை மதுரை வரும் பிரதமர் மோடியை வரவேற்க தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு , மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகர ஆணையாளர்,மேயர் இந்திராணி உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்க உள்ளனர். 

முன்னாள் முதல்வர்கள், ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொதுச் செயலாளர் இராம.சீனிவாசன், கோட்ட பொறுப்பாளர் கதளி நரசிங்க பெருமாள் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன் , வானதி சீனிவாசன் உள்ளிட்ட 40 பேர் பிரதமர் மோடியை சந்திக்க தேசிய பாதுகாப்பு படை அனுமதி வழங்கி உள்ளது. இந்த சந்திப்பிற்காக மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய உள்வளாக பகுதியில் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு அங்கு சந்தித்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: பிரதமர் மோடி வருகை எதிரொலியா..? பாம்பன் பள்ளிவாசலின் மினாரா மூடப்பட்டதா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share