×
 

உன் பருப்பு என் கிட்ட வேகாது..! டிரம்பை தைரியமாக மிரட்டிய இரான் சுப்ரீம் லீடர்

ஈரான் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் அணு ஆயுத பேச்சுவார்த்தை அழைப்பை இன்று திட்டவட்டமாக நிராகரித்தார்.

ஈரான் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் அணு ஆயுத பேச்சுவார்த்தை அழைப்பை இன்று திட்டவட்டமாக நிராகரித்தார். ஈரானை பேச்சுக்கு அடிபணிய வைக்க முடியாது என அவர் அறிவித்தார்.

டிரம்ப் நேற்று கமேனிக்கு கடிதம் அனுப்பியதாக தெரிவித்திருந்தார். அதில், ஈரானின் அணு ஆயுத திட்டங்களை கட்டுப்படுத்த ஒரு ஒப்பந்தம் தேவை என்றும், “ஈரானை இராணுவ ரீதியாகவோ அல்லது ஒப்பந்தம் மூலமோ கையாளலாம்” என்றும் குறிப்பிட்டிருந்தார். பொருளாதார தடைகளுடன் கூடிய “அதிகபட்ச அழுத்தம்” கொள்கையை மீண்டும் அமல்படுத்திய டிரம்ப், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை தடுக்க முயல்கிறார்.

மூத்த ஈரான் அதிகாரிகளிடம் பேசிய கமேனி, அமெரிக்காவின் அழைப்பு “தங்கள் எதிர்பார்ப்புகளை திணிக்கும் உத்தி” என்று அரசு ஊடகங்கள் மூலம் குற்றம்சாட்டினார். “சில மிரட்டும் அரசுகள் பேச்சுவார்த்தையை வலியுறுத்துவது பிரச்சினைகளை தீர்க்க அல்ல... அவர்களுக்கு அது புதிய கோரிக்கைகளை முன்வைக்கும் பாதை,” என்றார். அணு ஆயுத கட்டுப்பாடு மட்டுமல்லாமல், ஈரானின் ஏவுகணை திறனையும், பிராந்திய செல்வாக்கையும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அமெரிக்க கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என உறுதியாக கூறினார்.

2018-ல் டிரம்ப் 2015 அணு ஒப்பந்தத்திலிருந்து விலகிய பின், ஈரான் மீது கடுமையான தடைகள் விதிக்கப்பட்டன. அதன்பின், ஈரான் அணு ஆயுத தரத்திற்கு அருகில் உரேனியத்தை செறிவூட்டியது. ஐ.நா. அணு ஆயுத கண்காணிப்பு தலைவர் ரஃபேல் குரோஸி, பேச்சுவார்த்தைக்கு நேரம் குறைவு என எச்சரித்துள்ளார். ஈரான் தனது திட்டம் அமைதியானது என வலியுறுத்தினாலும், புதிய ட்ரோன் கப்பல் மற்றும் நிலத்தடி கடற்படை தளம் ஆகியவை மேற்கத்திய நாடுகளுக்கு மத்திய கிழக்கு ஸ்திரத்தன்மை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: என்னது சம்மதிச்சிட்டிங்களா..! அமெரிக்க வரிக்குறைப்பு குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும்.. காங்கிரஸ் வலியுறுத்தல்..!

ஈரானின் மிக உயர்ந்த தலைவரான கமேனி, மிரட்டலுக்கு எதிர்ப்பே பதில் என்று வலியுறுத்தினார். ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பாதுகாப்பு என அழைத்தாலும், அவை பிராந்தியத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துவதாக வெளிநாடுகள் கருதுகின்றன. டிரம்ப் விரைவு பலன்களை எதிர்பார்க்க, ஈரான் உறுதியாக நிற்க, இந்த மோதல் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. ஒப்பந்தமோ, அமைதியோ சாத்தியமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

இதையும் படிங்க: வரியைக் குறைக்க இந்தியா சம்மதம்..! வெளிப்பட்டுவிட்டார்கள்... தரக்குறைவாகப் பேசிய அதிபர் ட்ரம்ப்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share