×
 

X தளம் மீது சைபர் அட்டாக்..! உக்ரைனை கைக்காட்டும் எலான் மஸ்க்..!

X தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடந்துள்ளதாகவும், இதில் ஒரு நாடு சம்பந்தப்பட்டு உள்ளதாகவும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் எக்ஸ் தளம் ஒரே நாளில் மூன்று முறை முடங்கியது. சமூக வலைதளங்கள், இணையதளங்களின் முடக்கங்களைக் கண்காணிக்கும் தரவுகளின் படி 3 முறை முடங்கியுள்ளது. மூன்றாவது முறையாக 8.45 மணிக்கு மீண்டும் தளத்தின் செயல்பாடுகள் முடங்கின அப்போதுபல மணி நேரம் இந்த முடக்கம் நீடித்தது.

இந்நிலையில் எக்ஸ் தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடந்துள்ளதாகவும், இதன் பின்னணியில் உக்ரைன் உள்ளதாகவும் எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: அவரு சொன்னா கேட்கணுமா..? டிரம்பை மதிக்காத எலான் மஸ்க்!!

 எக்ஸ் தளத்தின் மீது அன்றாடம் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஆனால் இது மிகப்பெரிய சைபர் தாக்குதல் என கூறியுள்ளார். இதன் பின்னணியில் மிகப்பெரிய வலை அல்லது ஒரு நாட்டின் தலையீடு இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். தற்போது உக்ரைன் தான் அந்த நாடு என மஸ்க் முடிவுகட்டியுள்ளார்.

ரஷியா- உக்ரைன் போர் தொடர்பாக ஜெலன்ஸ்கிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், உக்ரைன் நாட்டில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது. ரஷியா- உக்ரைன் போர் தொடர்பாக ஜெலன்ஸ்கிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தான் இந்த சேவையை நிறுத்தினால் உக்ரைன் நாடு முடங்கும் என எலான் மஸ்க் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கிக்கு மிரட்டல் விடுத்திருந்தார். இதன் காரணமாக அவரின் எக்ஸ் தளம் தாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில், ஒரே நாளில் டெஸ்லாவின் பங்குகள் 15% வீழ்ச்சியடைந்தன. அமெரிக்காவில் நிலவும் பொருளாதார பிரச்னைகள் தான் டெஸ்லாவின் பங்கு வீழ்ச்சிக்கு காரணம் என்றாலும், எலான் மஸ்க்கின் மீதான மக்களின் கடுங்கோபமும் இதற்குப் பின்னால் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எலான் மஸ்குக்கு என்ன ஆச்சு..? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share