3 நாட்களுக்கு வெய்யிலுக்கு டாடா, bye bye.. கனமழை பெய்வதற்கான மஞ்சள் அலெர்ட்..!
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயில் மண்டையை பிளந்து வரும் நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கோடைமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி, குளுகுளுவென்று குளிரச் செய்துள்ளது.
கடந்த 2 வார காலமாகவே தமிழ்நாட்டில் வெப்பம் தகித்து வருகிறது. குறிப்பாக 11 மாவட்டங்களில் 7 நகரங்களில் 100 டிகிரி செல்சியஸ் என்ற அளவைத் தாண்டி வெப்பம் பதிவாகி வந்தது. இதனால் முதியவர்கள், குழந்தைகள், பச்சிளம் தாய்மார்கள், சிசுக்கள் என ஏராளமானோர் நண்பகலில் வெளியில் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். கடற்கரை மாவட்டங்களில் அனல்காற்றும் வீசியதால் தலைநகர் சென்னையில் மூளையை உருகச் செய்யும் அளவுக்கு வெப்பம் வாட்டி வதைத்தது.
இதையும் படிங்க: அடுத்த 3 நாட்களுக்கு அனாவசியமா வெளிய போகாதீங்க.. வெயில் அடி வெளுக்கப்போகுது.. ஜாக்கிரதை..!
இந்நிலையில் வருகிற ஏப்ரல் 3,4,5 ஆகிய மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்ல 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் குறைந்து பதிவாகும் என்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சட்டென்று மாறுது வானிலை பாடல் போல நம்மை குதூகலப்படுத்தி உள்ளது.
நாளை மறுநாள் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று அறிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகியவை தான் கனமழை பெறும் 5 மாவட்டங்கள் என்பது வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பாகும்.
இதேபோன்று வரும் 4, 5 ஆம் தேதிகளில் தமிழகத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி உள்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை சென்னையில் இன்றும், நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், இன்று முதல் தமிழகத்தில் மழை ஆரம்பிக்கும் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தநொடி வரை சென்னையில் அதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை என்பது கவலையளிக்கிறது.
இதையும் படிங்க: வாட்டி வதைக்கும் வெயில்... குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்!!