திருமணம் நிச்சயக்கப்பட்டதால் காதலனை விஷம் வைத்துக் கொன்ற இளம் பெண்: 'மரண தண்டனை' விதிக்கும்படி, நீதிமன்றத்தில் வலியுறுத்தல்
தமிழக - கேரள எல்லை பகுதியான நெய்யாற்றின் கரை அருகில் நடைபெற்ற இந்த கொடூர கொலையில் இளம்பெண் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தின் பாறசாலையை சேர்ந்த ஜெயராஜன் - பிரியா தம்பதியின் மகனான ஷாரோன் ராஜ் (வயது 23), கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி ரேடியாலஜி இறுதி ஆண்டு படித்துவந்தார். அழகியமண்டபம் பகுதியில் உள்ள கல்லூரியில் எம்.ஏ படித்து வந்த களியக்காவிளை ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா என்ற பெண்ணுடன் பஸ்ஸில்வைத்து ஷாரோன்ராஜிக்கு பழக்கம் ஏற்பட்டது.
ஓராண்டாக இருவரும் காதலித்த நிலையில் 2022-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி கிரீஷ்மா அழைத்ததன்பேரில் ரெக்கார்ட் நோட்டுக்களை வாங்க நண்பர் ரெஜினுடன் பைக்கில் சென்றுள்ளார் ஷாரோன் ராஜ். கிரீஷ்மா வீட்டில்வைத்து அவர்கொடுத்த கஷாயத்தையும், ஜூஸையும் குடித்துவிட்டு வெளியே வந்த ஷாரோன்ராஜ் வாந்தி எடுத்துள்ளார். பின்னர் நண்பரின் பைக்கில் வீட்டுக்குச் சென்றுள்ளார். அன்றே உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து பாறசாலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பயன் இன்றி ஷாரோன்ராஜ் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: கெளரி லங்கேஷ் கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 17 பேருக்கும் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்..
ஜூஸ் சேலஞ்ச்
ராணுவ வீரர் ஒருவருடன் கிரீஷ்மாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் ஷாரோன்ராஜ் காதலை கைவிட மறுத்துள்ளார். அதனால், கஷாயத்தில் பூச்சிமருந்து கலந்து ஷாரோன்ராஜிக்கு கிரீஷ்மா கொடுத்து விசாரணையில் தெரியவந்தது. ஷாரோன்ராஜை கொலை செய்ய, அப்போது வைரலாக இருந்த ஜூஸ் சேலஞ்ச் நடத்தி அதில் டோலோ மாத்திரைகள் உள்ளிட்டவைகளை கலந்து கொடுத்து எற்கனவே கொலை செய்ய முயன்றதும் விசாரணையில் அம்பலமானது.
இந்த வழக்கில் கிரீஷ்மா-வின் திட்டம் அவரது தாய் சிந்துவுக்கும் தெரியும் என கூறப்பட்டது. மேலும், கிரீஷ்மாவுக்கு பூச்சிமருந்து வாங்கிக்கொடுத்தது அவரது தாய்மாமா நிர்மல் குமார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கிரீஷ்மா, தாய் சிந்து, தாய்மாமா நிர்மல்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியேவந்தனர்.
இந்த வழக்கு நெய்யாற்றின்கரை அடிஷனல் செசன்ஸ் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. 95 சாட்சிகள் விசாரணை நடத்தப்பட்டன. இந்த வழக்கில் நெய்யாற்றின்கரை அடிஷனல் செசன்ஸ் நீதிமன்றம் கிரீஷ்மா மற்றும் விஷம் வாங்கி கொடுத்த அவரது தாய்மாமா நிர்மல் குமார் ஆகியோர் குற்றவாளிகள் என கூறியுள்ளது. இரண்டாம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த கிரீஷ்மாவின் தாய் சிந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கான தண்டனை நாளை அறிவிக்கப்பட உள்ளதாக கோர்ட் தெரிவித்துள்ளது.
நீதிபதியிடம் கெஞ்சிய கிரீஷ்மா
முன்னதாக தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு கிரீஸ்மாவை பார்த்து நீதிபதி, "ஏதாவது கூற விரும்புகிறீர்களா?" என கேட்டார். உடனே கரிஷ்மா நீதிபதியிடம் ஒரு கடிதத்தை கொடுத்தார். நீதிபதியிடம் கெஞ்சி கேட்பது போல் அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது :-
'எனக்கு இப்போது 24 வயது ஆகிறது. ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்திருக்கிறேன். மேலும் தொடர்ந்து நான் படிக்க விரும்புகிறேன். பெற்றோருக்கு நான் ஒரே மகள். எனவே எனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன் " இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மரண தண்டனை விதியுங்கள்
அதனைத் தொடர்ந்து அரசு தரப்பு வழக்குரைஞர் தனது வாதத்தை முன் வைத்தார். அவர் கூறும் போது "கொடூர மனம் படைத்தவர் கிருஷ்ணா. உயிரை இழப்பதற்கு முன்பு சரோன்ராஜ் அனுபவித்த வேதனை குறித்து டாக்டர்களின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அபூர்வங்களில் அபூர்வமான வழக்கு இது என்பதால் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். ஒரு அப்பாவி இளைஞனை மட்டுமின புனிதமான நட்பையும் குற்றவாளி ஆன கிருஷ்ணா கொண்டு விட்டார் காதலிப்பதாக நட்பு பாராட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்று விஷம் கொடுத்து கொலை செய்திருக்கிறார் முன்கூட்டியே திட்டமிட்டு இந்த கொலை நடத்தப்பட்டு உள்ளது இது தெரியாமல் நடந்து விட்டதாக கூற முடியாது கல்வி அறிவு பெற்ற கிரீஸ்மா தனது அறிவை தவறாக பயன்படுத்தி இருக்கிறார் குற்றவாளியான அவர் ஈவு இரக்கமற்றவர். ஆகவே அவருக்கு கருணை காட்டத் தேவையில்லை. அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தண்டனை விவரம் பற்றி திங்கள்கிழமை அதாவது நாளை அறிவிப்பதாக கோரி விசாரணையை ஒத்தி வைத்தார்.
கொலை செய்யப்பட்ட சாருன் ராஜன் பெற்றோரான ஜெயராஜ் பிரியா தம்பதியரும் குற்றவாளி கிருஷ்ணாவுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதே எங்களுடைய வேண்டுதல் இந்த வழக்கில் கரிஷ்மாவின் தாயார் சிந்து விடுவிக்கப்பட்டது துரதிஷ்டவசமானது இதற்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு செல்வோம் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: "லிவ் இன் பார்ட்னர்" காதலி கொலை; உடலை, 6 மாதங்களாக ஃப்ரிட்ஜில் வைத்து பூட்டிய கொடூரன் கைது...