11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. தந்தை உயிரிழந்த துயரிலும் தேர்வெழுத சென்ற மாணவி..!
திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்து 11ஆம் வகுப்பு மாணவி தந்தை உயிரிழந்த நிலையிலும் பொது தேர்வு எழுதச்சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் மாணவி ஷாலினி, அருகே உள்ள தேனேரிப்பட்டி பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். பொதுத்தேர்வு நேரத்தில் அவரது தந்தை சண்முகம் இறந்துவிட்டார்.
இருப்பினும் அந்த துக்கத்தை மனதில் இருத்திக் கொண்டு மாணவி ஷாலினி பொதுத் தேர்வினை BHEL வளாக பள்ளி மையத்தில் எழுதினார். ஆசிரியர்களும் சக மாணவர்களும் அவருக்கு ஆறுதல் கூறி தேர்வை எழுத வைத்தனர்.
இதையும் படிங்க: வணிக வளாகத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது.. மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு..!
இந்த நிலையில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று மாணவி ஷாலினியின் வீட்டுக்குச் சென்று அவருக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி, தந்தையின் மறைவுக்கு ஆறுதல் கூறினார். உடன் ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எந்த ரூட்டில் செல்லப்போகிறது தெரியுமா?