ரயில் தண்டவாளத்தில் இளைஞர்-இளம்பெண் சடலம்.. பிரித்து விடுவார்கள் என அஞ்சி காதலர்கள் தற்கொலை..!
வேலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் இளம் பெண் மற்றும் இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ரயில்வே தண்டவாளத்தில் இளம் பெண் மற்றும் இளைஞர் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடல்களை கைப்பற்றிய போலீசார் உடற்குறைவிற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, தண்டவாளத்தில் சடலமாக கிடந்தவர்கள் யார்? இது தற்கொலையா? கொலையா? என்று காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
இந்நிலையில், முதல்கட்ட விசாரணையில் தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்த ஆண் லத்தேரி அடுத்த அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிய வந்துள்ளது. இவர் கட்டட தொழிலாளியாக இருந்து வந்துள்ளார். இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக இவரை விட்டுப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கே.என்.நேருவின் சகோதரரும் மகனும் சேர்ந்து வாய் பிளக்கவைக்கும் மோசடி… ED-யிடம் சிக்கிய ஆதாரங்கள்..!
மேலும் தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்த பெண் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த கல்லூரி மாணவி கோகிலா என்பது தெரிய வந்துள்ளது. இவருக்கும் மணிகண்டனுக்கும் இடையே இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட தொடர்பு காதலாக மாறிய நிலையில் கோகிலாவும் சேகரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
முன்னதாக கோகிலாவின் தாயார் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் மகளை காணவில்லை எனப் புகார் அளித்திருந்த நிலையில், மகள் கோகிலாவை நெல்லிக்குப்பம் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று இருவரும் லத்தேரி அருகே ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தஞ்சையில் சகோதரிகள் தற்கொலை.. காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவல் ஆய்வாளர்!