×
 

முதலமைச்சர் பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி.. காவு வாங்கிய காளை..

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் வீரர் ஒருவர் பலியானார். 

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டு வாடிவாசலில் இருந்து சீறி பாய காத்திருந்தன. முன்னதாக இந்த நிகழ்ச்சியை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் கீழக்கரை ஜல்லிக்கட்டில் திருச்சி புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் வரவழைக்கப்பட்டு போட்டியில் பங்கேற்றன. முதலில் கோவில் காளையானது அவிழ்த்து விடப்பட்ட நிலையில் அடுத்தடுத்த காளைகள் சீறிப்பாய்ந்து வெளிவந்தன.

இதையும் படிங்க: கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி.. 5 வீரர்கள் படுகாயம்..!

 காளைகளின் சீற்றத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மாடுபிடி வீரர்கள் தினறினார். இந்த நிலையில் தான் ஜல்லிக்கட்டு மாடு ஒன்று முட்டியதில் மாடுபிடி வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதை எடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி உயிரிழந்த நபர் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த மகேஷ் பாண்டியன் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் முன்னதாக மகேஷ் பாண்டியன் உடல் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வாடியில் தேங்கிய மழைநீர்.. ஜல்லிக்கட்டு போட்டியின்றி களை இழந்த கோயில் திருவிழா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share